🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வன்னியர் 10.5 இடஒதுக்கீடு: தடைகோரிய தமிழக அரசு!- முகத்தில் கரி பூசிய உச்சநீதிமன்றம்!

வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. 

முன்னதாக கடந்த நவம்பர்  01-ஆம் தேதி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, பாட்டாளி மக்கள் கட்சி என 13 வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. தமிழக அரசின் மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியிடம் மூத்த வழக்கறிஞர் வில்சன் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து வழக்ககு கடந்த 10-ஆம் தேதியே விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் எதிர்பார்த்தது போல் வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படாததை அடுத்து, தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மீண்டும் கடந்த செவ்வாயன்று  உச்சநீதிமன்ற பதிவாளரிடம் மனுவை விரைந்து விசாரிக்க முறையிட்டனர். இதனையடுத்து நேற்று மாலை வெளியான பட்டியலில்  10.5 விழுக்காடு இடஒதுக்காட்டை ரத்து  செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு தடைகோரும் வமனுவின் மீதான விசாரணை நீதியரசர்கள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய்,பி.வி. நாகரத்னா ஆகியோர் அமர்வு முன்பு நாளை (இன்று) காலை 7-வது வழக்காக விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி இன்று காலை 11.30 மணியளவில் மனு விசாரணைக்கு வந்தபொழுது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடைகோரும் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து, வழக்கின்  அடுத்த விசாரணையை பிப்ரவரி 15,16 தேதிகளுக்கு ஒத்தி வைத்தனர். 

இருந்த போதிலும் தமிழக அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்த 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின்படி நடைபெற்ற மாணவர் சேர்க்கை மற்றும் பணியிடங்களை தொடர உத்தரவிட்டு ஆறுதல் அளித்தனர். 

மேலும், இந்த வழக்கை விரைந்து நடத்த வலியுறுத்தக்கூடாது, விசாரணை முடியும் வரை 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டின்படி மாணவர் சேர்க்கை, பணியிடங்கள் நிரப்பக்கூடாது என்றும் நிபந்தனை பிறப்பித்தனர்.  இந்த வழக்கு விசாரணை மாராத்தா இட ஒதுக்கீடு வழக்கோடு சேர்த்து நடத்தப்படும் என்று கூறி, எதிர் மனுதாரர்களுக்கு  நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டு இன்றைய விசாரணையை முடித்து வைத்தனர். 

ஏற்கனவே உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புகளின் அடிப்படையில் அமைந்த சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இறுதி வெற்றியை நமக்கு உறுதி என்ற நிலையில், முதற்கட்ட விசாரணையில் தடை பெற்றுவிட்டால் வழக்கை விசாரணையை பல பத்தாண்டுகளுக்கு இழுத்துவிட்டு அரசியல் அறுவடை செய்துகொள்ள நினைத்த ஆளும்கட்சி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினரின் முகத்தில் கரியை பூசியுள்ளது. 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved