🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மழையால் பாதிக்கப்பட்ட கம்பளத்தார் நிலங்களை பார்வையிட்டார் பாஜக தலைவர்.

வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் இரண்டாவது வாரம் வரை தொடர்ந்து தமிழகமெங்கும் பெய்துவந்தது. இதனால் சென்னை முதல் கன்னியாகுமரி வரையுள்ள கடலோர மாவட்டங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடுமையான சேதாரத்தை உண்டாக்கியது. 


இந்த வருடம் பெய்த இயல்புக்கு மாறான பலத்த மழையால் கடலோர மாவட்டங்கள் தவிர்த்த உள்மாவட்டங்களில் கூட முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வறண்டுபோய் இருந்த ஆறுகளில் கரையைத்தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்தோடியதை காணமுடிந்தது. இதனால் தமிழகத்திலுள்ள 90 சதவீதத்திற்கும் மேலான ஏரி,குளங்கள், கண்மாய்களில் நீர் நிரம்பியுள்ளதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 


இந்த மழையால் டெல்டா மாவட்டங்கள் தவிர தேனி, தென்காசி உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலையடிவார மாவடங்களில் உள்ள நெல் வயல்கள் நாசமாகின.

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களும் மத்திய அரசின் குழுவும் ஆங்காங்கே வெள்ள சேதாரங்களை பார்வையிட்டும் ஆய்வு செய்தும் வருகின்றனர்.


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களும் வெள்ள சேதாரங்களை பார்வையிட்டு வருகிறார். அதனடிப்படையில் பாஜக மாநில விவசாய அணித்தலைவர் ஜி.கே.நாகராஜன் நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மழையால் சேதமான வெங்காயம் பயிரிடப்பட்ட விவசாய நிலைங்களை பார்வையிட்டார்.  முன்னதாக ஜி.கே.நாகராஜன் வெள்ள சேதாரங்களை பார்வையிட தான் இராசிபுரம் வர இருப்பதாக தன் நீண்டநாள் நண்பரும் விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவருமான கே.நாகராஜனுக்கு தகவல் தெரிவித்திருந்தார். 


அதனையடுத்து இராசிபுரம் வந்த ஜி.கே.நாகரஜனை சால்வை அணிவித்து கொ.நாகராஜன் வரவேற்றார். அதனையடுத்து கம்பளத்தார் கிராமங்களில் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு பாஜக தலைவரை அழைத்துச்சென்று கொ.நாகராஜன் காண்பித்தார். சேதமான பயிர்களை பார்வையிட்ட ஜி.கே.நாகராஜன் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல்கூறி உரிய நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved