🔴 LIVE | முப்பெரும் விழா 2023


விவசாயிகளின் விடிவெள்ளியின் 37-வது நினைவுநாள்!

சமீபகாலத்தில் விவசாயிகள் ஒன்று திரண்டு ஓராண்டுகள் டெல்லியை முற்றுகையிட்டு முடக்கியது போல், 1950-களில் விவசாயத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தை 16 மணி நேரத்திலிருந்து 4-மணி நேரமாக அன்றைய அரசு குறைத்த பொழுது யாராலும் ஒன்றிணைக்க முடியாத அவிழ்த்துவிடப்பட்ட நெல்லிக்காய் மூட்டைகள் என்று சொல்லப்படும் விவசாயிகளை ஒன்றிணைத்து, தமிழகத்தில் மாபெரும் போராட்டங்களை நடத்தி அன்றைய ஆட்சியாளர்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தவர் அமரர். சி.நாராயணசாமி நாயுடு. கோவையில் விவசாயிககளை ஒன்றுதிரட்டி இவர் நடத்திய போராட்டத்தின் காரணமாக மீண்டும் விவசாயத்திற்கு 16 மணிநேரம் மின்சாரம் வழங்கப்பட்டது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் விவசாயிகளின் நலனுக்காக போராடியதோடு, இலவச மின்சாரம் வேண்டுமென போர்க்குரல் கொடுத்தவர் சி.நாரயணசாமி நாயுடு அவர்கள் 21.12.1984-இல் காலமானார்.

அன்னாரின் 37-வது நினைவுநாளையொட்டி (21.12.2021) கோவை அருகே, வையம்பாளையத்தில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள அவரது சிலைக்கு விடுதலைக்களம் கட்சியின் சார்பில் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, விடுதலைக்களம் கட்சியின் பூவரசி இராஜேந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved