🔴 LIVE | முப்பெரும் விழா 2023


DNT கணக்கெடுப்பு நடத்தும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவு.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18-ஆம் தேதி மத்திய அரசு நாடுமுழுவதும் உள்ள சீர்மரபு பழங்குடியினர் மக்கள் குறித்தான புள்ளிவிபரங்களை திரட்ட அந்தந்த மாநிலங்கள் தனி அதிகாரி ஒருவரை நியமித்து 2020 டிசம்பர் 31-க்குள் தகவல்களை திரட்டி மத்திய அரசுக்கு அனுப்பக்கோரி கடிதம் எழுதியிருந்தது. ஆனால் எடப்பாடி.க.டழனிச்சாமி தலைமையிலான அரசு அதை கண்குகொள்ளாமல் கிடப்பில் போட்டுவிட்டது.

இதனை எதிர்த்தும் உடனடியாக தமிழகத்தில் வீடு, வீடாக சென்று சீர்மரபினர், பழங்குடியினர் குறித்து கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தமிழ்நாடு கொண்டையன் கோட்டை மறவர் பொதுநலச் சங்கத்தலைவர் சீனிப்பாண்டியன் மனு தாக்கல் செய்திருந்தார். 

அந்த வழக்கு விசாரணை மதுரை கிளையில் நடைபெற்று வந்தநிலையில், நேற்று தமிழக அரசிற்கு உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்.

இந்த வழக்கின் விபரம் வருமாறு. 

நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக சீர்மரபினர், பழங்குடியினர் குறித்த தரவுகளை மத்திய அரசு சேகரித்து வருகிறது. இதற்காக தமிழகத்தில் வீடு, வீடாக சென்று சீர்மரபினர், பழங்குடியினர் கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு மத்திய சமூக நலத்துறை செயலர் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி உத்தரவிட்டார்.

இந்த கணக்கெடுப்புக்கான செலவையும் மத்திய அரசே வழங்குகிறது. ஆனால் இதுவரை ஒரு கணக்கெடுப்பும் நடத்த வில்லை என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் காசிப்பாண்டியன் வாதிட்டார். 

அரசு வக்கீல் வாதிடுகையில், சீர்மரபினர், பழங்குடியினர் கணக்கெடுப்பு தொடர்பான மத்திய அரசின் உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக மனுதாரருக்கு 16 வாரத்தில் அறிக்கை அளிக்கப்படும் என்றார். இதனையடுத்து தமிழகத்தில் இந்த கணக்கெடுப்பில் தற்போதைய நிலை குறித்து மனுதாரருக்கு 12 வாரத்தில் தலைமை செயலர் அறிக்கை அளிக்க நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved