🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வன்னியர் இடஒதுக்கீடு அவசர சட்டம் கூடாது! - முதல்வருக்கு கோரிக்கை.

நாள்:01.02.2022

பெறுநர்
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்,
தலைமை செயலகம்,
புனித ஜார்ஜ் கோட்டை,
சென்னை - 600009.

மதிப்பிற்குரிய மாண்புமிகு தமிழக முதலவர் அவர்களுக்கு,
பொருள் :  மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - சீர்மரபு பழங்குடியினர் - தமிழ்நாடு அரசுச் சட்டம் எண் : 8/2021 - வன்னியகுல சத்திரியர் - 10.5% உள் இடஒதுக்கீடு - உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவை - வன்னியருக்காக அவசர சட்டம் இயற்றக்கூடாது - 20% இடஒதுக்கீட்டினை கூறுபோடக் கூடாது - வேண்டுதல் - சம்பந்தமாக.

தமிழ்நாட்டில் இந்திய அரசமைப்புச் சட்டம் சரத்துகள் 15 மற்றும் 16ன் படி, கல்வி மற்றும் சமூக ரிதியாக பின்தங்கியுள்ள மக்களுக்கு, உயர் கல்வி மற்றும் அரசு பணிகளுக்கு சாதிவாரியாக கீழே குறிப்பிடப்பட்ட இடஒதுக்கீடு வழங்கீடுகிறது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC) - 30 சதவீதம்
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC/DNT) - 20 சதவீதம்
பட்டியல் இனத்தவர் (SC) - 18 சதவீதம்
பட்டியல் பழங்குடியினர் - 1 சதவீதம்
மொத்த இடஒதுக்கீடு -69 சதவீதம் போக, மீதம் உள்ள 31 சதவீதம் பொது வகுப்பினருக்கு வழங்கப்படுகிறது.

மேலும், மேற்குறிப்பிட்ட 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்கும் வகையில், 31.08.1994 அன்று 76வது இந்திய அரசமைப்புச் சட்ட திருத்தத்தின் மூலம், தமிழக அரசு சட்டம் எண்.45/1994 (Tamil Nadu BC, SC, ST (Reservation of Seats in Educational Institutions and Appointments or Posts in the Services under State Act, 1994) என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 9 வது அட்டவணையில் 257A, என்ற எண்ணாக இணைக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசு சட்டம் எண்.45/1994ஐ எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் இன்று வரை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், முந்தைய அதிமுக அரசு, 26.02.2021 அன்று தமிழக அரசின் 26.02.2021 நாளிட்ட தமிழ்நாடு சட்டம் எண் : 8/2021ன் படி, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20சதவீத இடஒதுக்கீட்டை மூன்றாக கூறுபோட்டி தமிழகத்தில் 10% க்கு குறைவாக உள்ள வன்னியகுல சத்திரியர் என்ற ஒரே சாதிக்கு 10.5 சதவீதமும், சீர்மபினர் 68 சாதிகளுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின 25 சாதிகளுக்கும்  சேர்த்து 93 சாதிகளுக்கு 7 சவீதமும் மீதமுள்ள 22 மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சாதிகளுக்கு 20.5 சதவீதமும் வழங்கி தமிழ்நாடு சட்டம் எண் : 8/2021யை நிறைவேற்றியது. இது மாபெரும் சமூக அநீதியாகும். வரலாறு காணாத சமூகநீதிப் படுகொலையாகும். ஜன நாயகம் அழிக்கப்பட்டு வன்முறை வெற்றி பெற்றுள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக முந்தைய அதிமுக அரசு மிகப்பெரிய இனம் சார்ந்த வாழ்வாதாரப் படுகொலையை அரங்கேற்றியுள்ளது. 1985ம் ஆண்டு இரண்டாவது தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையத்தின் தலைவர், வன்னியர் சாதியைச் சாந்த, திரு.அம்பாசங்கர் அவர்களது அறிக்கையை வழிகாட்டியாகக் கொண்டு, 13.06.2012 நாளிட்ட இவ்வாணையத்தின் தலைவர், வன்னியர் சாதியைச் சார்ந்த, திரு.ஜனார்த்தனம் அவர்களது பரிந்துரை மற்றும் 22.02.2021 நாளிட்ட இவ்வாணையத்தின் தலைவர், வன்னியர்  சாதியை சார்ந்த, திரு.தணிகாசலம் அவர்களது பரிந்திரையின்படி, இச்சட்டம் வன்னியர்களின் வாக்கு வங்கிக்காக அவரகதியில் முந்தைய அதிமுக அரசினால் இயற்றப்பட்டது.

அரசு சட்டம் 8/2021ன் படி தென்மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் 115 சாதிகள் அடங்கிய சீர்மரபு பழங்குடியினர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வாய்புகள் மறுக்கப்படும். ஏனென்றால் 10.5 சதவீத இடங்கள் ஒரே சாதியான வன்னியருக்காகவே ஒதுக்கப்படும். இதனால் தகுதியிருந்தும் உயர்கல்வியிலும், அரசு வேலைவாய்ப்பிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு வாய்ப்புகள் மிகவும் குறையும்.

மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை 01.11.2021 அன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக, தமிழ்நாடு அரசு சட்டம் 8/2021 ஐ ரத்து செய்தது. இத்தீர்ப்பினைத் தடை செய்யக் கோரி  தமிழக அரசு, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் சிலர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

இத்தருணத்தில், சீர்மரபு பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் மற்றும் மேம்பாடு கருதி,
தமிழ்நாடு இரண்டாவது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்ட, முரண்பட்ட, மாறுபட்ட, மற்றும் பொய்யான தரவுகளைக் கொண்ட 1985ம் ஆண்டின் அம்பாசங்கர் கமிஷன் அறிக்கையை எக்காரணத்தைக் கொண்டும் வழிகாட்டி அறிக்கையாக செயல்படுத்தாமல் அந்த அறிக்கையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்றும்,
தமிழக அரசு எக்காரணத்தை கொண்டும் அரசு சட்டம் 8/2021 சார்ந்த சரத்துக்களைச் செயல்படுத்த மீண்டும் ஒரு அவரச் சட்டம் இயற்றக்கூடாது, ஏற்கனவே நடைமுறையிலிருக்கும் 116 சாதிகள் அடங்கிய சீர்மரபினர் உட்பட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இடஒதுக்கீட்டினை எக்காரணத்தை கொண்டும் கூறுபோடக்கூடாது மற்றும் ஒரே சாதிக்கு - சத்திரியகுல வன்னியருக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என்றும், 

மரியாதியக்குரிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உடனே நடவடிக்கை எடுக்க உரிய உதவி செய்யுமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறேன்.

இடம்:   சென்னை 
  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved