🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நகர்ப்புற உள்ளாட்சிக்களத்தில் மோதும் கம்பளத்தார்!

தமிழ்நாட்டில் வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கம்பளத்தார்கள் அவரவர் சார்ந்துள்ள கட்சிகளின் சார்பிலும், சுயோட்சையாகவும் போட்டியிடுகின்றனர். இவர்களில் பெரும்பான்மையினர் பெண்களாக இருப்பது பெருமகிழ்ச்சி தரத்தக்கதாக உள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் புதூர் பேரூராட்சியில் உள்ள பெரும்பாலான வார்டுகளில் கம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். புதூர் பேரூராட்சி 10-வது வார்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருமதி.சு.சித்ராதேவி போட்டியிடுகின்றார். முதுநிலை வணிக மேலாண்மை பட்டம் (Master of Business Administration-MBA) பெற்றுள்ள திருமதி.சித்ராதேவி அதிமுக மூத்த தலைவரும், ஒன்றியச் செயலாளர் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினருமான திரு.ஞானகுருசாமி அவர்களின் மருமகள் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியலில் நீண்ட நெடிய பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவரான சித்ராதேவி யின் கணவர் திரு.சுரேஷ்குமார் அவர்கள் பள்ளி ஆசிரியராக உள்ளார். இவர் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் இடஒதுக்கீடு சட்டப்போராட்டத்திற்கு நிதியுதவி அளித்து சமுதாய நலனில் தன் அக்கறையை தொடர்ந்து வெளிப்படுத்தி வருபவர்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 17-வார்டிலிருந்து மாமன்ற உறுப்பினர் பதவிக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிடுகிறார் திரு.N.கோபால். இவருக்கு தண்ணிர் குழாய் சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். பிரதான அரசியல் கட்சியில் பணியாற்றி வந்த கோபால் அவர்களுக்கு போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் தனது மக்கள்சேவையை சோதித்துப்பார்க்க கள்மிறங்கியுள்ளார் திரு.கோபால்.

அதேபோல் திண்டுக்கல் மாவட்டம்  அய்யலூர் பேரூராட்சிக்குட்பட்ட 15-வது வார்டில் தேசிய திராவிட முற்போக்கு கழகத்தின் சார்பில் முரசு சின்னத்தில் போட்டியிடுகிறார் பஞ்சந்தாங்கி திரு.வடிவேல் அவகர்கள். அவருக்கு அங்குள்ள சமுதாயத்தின் முக்கியத்தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், கூகலூர் பேரூராட்சிக்குட்பட்ட 6-வது வார்டில் நமது சமுதாய அமைப்பான விடுதலைக்களம் கட்சியின் ஆதரவுடன் பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு சுயோட்சையாக போட்டியிடுகின்றார் திரு.பாக்கியராஜ் (எ) த.பிரசாத். இவருக்கு தென்னை மரம் சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். இவருக்கு ஆதரவாக பட்டக்காரர் திரு.பிரதாபன் உள்ளிட்ட முன்னனி தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சி நாளை வெளிவரும்...




  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved