🔴 LIVE | முப்பெரும் விழா 2023


எங்கெங்கு காணினும் சக்தியடா! நகர்ப்புற உள்ளாட்சியில் நாயக்கர் இன நாயகிகள்!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் கம்பளத்தார்கள் வசிக்கும் பகுதிகள் சில பேரூராட்சிகளாக தரம் உயர்ந்துள்ளன. இதன் காரணமாக அதிகப்படியானோர் பேரூராட்சி உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை பெற்றுள்ளனர். மாநகராட்சிகளைப்பொறுத்தவரை கோவை,திருப்பூர்,கரூர், தூத்துக்குடி மாநகராட்சிகளில் கம்பளத்தார் போட்டியிடும் வாய்ப்பினை பெற்றுள்ளனர். 

இந்த தேர்தலைப்பொறுத்தவரை திராவிட முன்னேற்றக் கழகத்தைப்பொறுத்தவரை 10 ஆண்டுகளுக்குப்பிறகு ஆளும்கட்சியாக வந்திருப்பதால் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு பெறுவதென்பது அவ்வளவு லேசுப்பட்ட காரியமல்ல. அந்த தடையையும் தகர்த்து ஒருசிலர் வாய்ப்பு பெற்றுள்ளனர். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வில் கம்பளத்தார்கள் எப்பொழுதுமே குறிப்பிடத்தக்க அளவில் போட்டியிடும் வாய்ப்பினை பெறுவது வழக்கம். இந்தமுறையும் அது நடந்துள்ளது மகிழ்ச்சிக்குறியது.

இதில் மற்றொரு சிறப்பம் யாதெனில், நகர்ப்புற உள்ளாட்சியில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் என்பதும் அதில் 95 சதவீதத்திற்கும் அதிகமானோர் பட்டதாரிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தாய் வழி சமூகமான கம்பளத்தார் சமுதாயத்தில் பெண்கள் முன்னேறி வருவதும், அரசியல் பதவிகளை பெறுவதும் சமுதாயத்திற்கு மிக ஆரோக்கியமான விசயம்.  வீழ்ந்துகிடக்கும் கம்பளத்தார் இனத்தை மீண்டும் எழுச்சியுற செய்ய பெண்களால் மட்டுமே முடியும். அதற்கான வாய்ப்பு இயற்கையாகவே அமைந்துள்ளது சமுதாயத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம்.

அந்தவகையில் விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு பேரூராட்சிக்குட்பட்ட 13-வது வார்டில் திமுக வேட்பளாராக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றார் திருமதி.அ.சுமதி. இவர் பார்மசிதுறையில் பட்டயம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தூத்துக்குடி மாவட்டம், விளாத்துக்குளம் அருகேயுள்ள புதூர் பேரூராட்சிக்குட்பட்ட 2-வது வார்டில் திருமதி.எஸ்.சண்முகப்பிரியா அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றார். திருமதி.சண்முகப்பிரியா பொறியியல் பட்டதாரி என்பது கூடுதல் சிறப்பு.

இதே தூத்துக்குடி மாவட்டம், விளாத்துக்குளம் புதூர் பேரூராட்சிக்குட்பட்ட 15-வது வார்டில் திருமதி.எஸ்.அன்னலட்சுமி அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றார். திருமதி.அன்னலட்சுமி இளங்கலை அறிவியல் (B.Sc) பட்டதாரி  எனபது குறிப்பிடத்தக்கது.

கோவை மாவட்டம் காரமடை நகராட்சிக்குட்பட்ட 11-வது வார்டில் திருமதி.புவனேஸ்வரி மனோகரன் அவர்களுக்கு நகரமன்ற உறுப்பினர் வேட்பாளாராக களமிறக்கியுள்ளது எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.  இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் திருமதி புவனேஸ்வரி அவர்களின் கணவர் காரமடை பகுதியில் அதிமுக முக்கிய நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் தொடர்ச்சி நாளை வெளியாகும்...

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved