🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நிலைநாட்டப்பட்ட கம்பளத்தார் உரிமை! முடிவுக்கு வந்த செங்குளம் கோவில் பிரச்சினை!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் செங்குளம் கிராமத்தில்  கம்பளத்தார் உள்ளிட்ட பல்வேறு சமுதாயத்தினர் சுமார் 300ஆண்டுகளாக வழிபட்டு வந்த இராஜகாளியம்மன் கோவிலைச்சுற்றிலும் கழிவுநீர் குளம் போல் தேங்கி இருந்ததால், பொதுமக்கள் துர்நாற்றத்திற்கு மத்தியில் பல ஆண்டுகளாக வழிபாடு செய்து வந்தனர். எனவே கடந்த பத்தாண்டுகளுக்கு முன் கோயிலை புதுப்பித்து புதிய பீடமைத்து வழிபாடு செய்ய அக்கிராம மக்கள்  முடிவு செய்து, கட்டுமானப்பணியை துவங்க ஆயத்தமாகினர்.  உள்ளாட்சித் தேர்தலின் போது ஏற்பட்ட பிரச்சினைகள் மற்றும் இருதரப்பினருக்குமிடையே நிலவி வந்த மோதல்போக்கு காரணமாக கோவிலை புதுப்பிக்க ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இப்பிரச்சினை உயர்நீதிமன்றம் வரை சென்றது. உயர்நீதிமன்றம் கோவில்கட்ட தடைவிதிக்க மறுத்துவிட்ட போதிலும், பட்டியலின மக்களுக்கும், பிற சமுதாய மக்களுக்குமான பிரச்சினையாக முன்னிறுத்தப்பட்டதால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை, சமூக பதட்டம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகக்கூறி காவல்துறையும், வருவாய்துறையும் கோவில் கட்டுவதற்கு முட்டுக்கட்டையிட்டு வந்தனர்.



மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழையாமையால் அக்கிராம மக்கள் கோவில் பீடம் அமைக்க முடியாமல் பரிதவித்து, செய்வதறியாது கடந்த சில ஆண்டுகளாக தவித்து வந்தனர். இப்பிரச்சினையை தீர்க்க உதவும்படி விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜனிடம் சமுதாய மக்களில் சிலர் கோரிக்கை வைத்தனர். மக்களின் இந்த வேண்டுகோளை ஏற்று முதல்கட்டமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு கடந்த அக்டோபர் மாதம் மனு வழங்கினர். இதற்கும் மாவட்ட நிர்வாகம்  செவிசாய்க்காதால், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப்போராட்டத்தை விடுதலைக்களம் கட்சியின் சார்பில் நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து அதிகாரிகள் தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அம்மாவட்ட அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர், ஆகியோரின் முயற்சியோடு இப்பிரச்சினைக்கு சுமூக தீர்வு எட்டப்பட்டது.


இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் கோவில் கட்டுமானப்பணிகள் முழுவீச்சில் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனைத்தொடர்ந்து புனரமைக்கப்பட்ட அருள்மிகு இராஜ காளியம்மன் திருக்கோயிலுக்கு  01-02-2022 ஆம் நாள் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் அம்பாளுக்கு பிரதிஷ்டை செய்து காப்புக் கட்டிய பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அம்மனை தரிசனம் செய்து வெகு சீறும் சிறப்புமாக குடமுழுக்கு விழா இனிதே நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று 11-02-2022 பூரண அபிசேகம் செய்து காலை 10 மணியளவில் அம்பாளின் அருட்பிரசாத அன்னதான நிகழ்வில் சுற்று வட்டார பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர் கோயில் திருப்பணிக்காக அயராது உழைத்த அனைவருக்கும் கிராம பொதுமக்கள் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதன்மூலம் பொதுமக்கள் பயன்படுத்தப்படமுடியாத அளவிற்கு குப்பை மேடாகவும், சுகாதாரமற்றும் இருந்தநிலை மாறி, முழுமையாக  சீரமைக்கப்படு புதுப்பொழிவு பெற்றுள்ளதால் அக்கிராம மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செங்குளம் பிரச்சினைக்காக குரல் கொடுத்த விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன், அவரோடு நிகழ்விடத்திற்கே சென்று மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக குரல் எழுப்பிய வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜு, அமைச்சர் பெருமக்கள், ஒத்துழைப்பு நல்கிய அரசு அதிகாரிகள் உள்ளிடோருக்கு கம்பளத்தாரின் நன்றி. 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved