🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சேதப்படுத்தப்பட்ட தெய்வமாக வழிபடும் ஜமீன்தார் சிலை! போராட்டத்தால் பரபரப்பு.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் 2-வது ஜமீன்தாரராக இருந்தவர் ராசுநாயக்கர். அவர் மறைந்து 200 ஆண்டுகளுக்கு மேலாகியபொழுதும் அப்பகுதி மக்கள் சாதிமத பாகுபாடின்றி தங்கள் ஜமீன்தாரருக்கு கோவில் அமைத்து திருவுருவச்சிலை அமைத்து தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். 

போடியில் அமைந்துள்ள 200 வருட பழமையான ராசுநாயக்கர் திருக்கோவிலுக்குள் கடந்த வெள்ளியன்று (11.02.2022 ) நள்ளிரவில் குடிபோதையில் நுழைந்த போடியை சேர்ந்த கார்த்தி என்பவர் ராசுநாயக்கர் திருவுருவச்சிலையை உடைத்து சேதபடுத்தியுள்ளார். இது சம்மந்தமாக போடிநகர் காவல்துறையில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் நேற்று(13.2.2022) போடி ஜமீன்தார் திரு.S.ரமேஷ்பாண்டியர் தலைமையில், தேனி மாவட்ட த.வீ.ப.க.பண்பாட்டு கழக மாவட்ட செயளாளர் திரு.R.சக்திவேல், ஆண்டிபட்டி மாலைகோவில் செயளாளர் திரு.K.நாகராஜன், எரசை ஜமீன்தார் K.சாமிதுரை, த.வீ.க.ப. மாநில இளைஞரணி துணைத்தலைவர் திரு.K,சுருளிமணி, தேனி ஒன்றிய தலைவர் திரு அம்சமணி, செயளாளர் S.ரமேஸ்பாபு, கைலாசப்பட்டி திரு.முருகன் மற்றும் போடி, கரட்டுப்பட்டி,ஜக்கம்மநாயக்கன்பட்டி கிராமங்களைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் திரண்டு சிலையை உடைத்த நபரை கைது செய்து சிறையிலடைக்கக்கோரி சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து  போடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் உடனடியாக களத்தில் இறங்கிய போடி நகர காவல்நிலைய ஆய்வாளர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகிறார். இதனையடுத்து போராட்டத்தை விலக்கிக்கொள்ளப்பட்டது.  


மேலும் சம்பவ இடத்தை தேனி மாவட்ட செயளர் R.சக்திவேல், ஆண்டிபட்டி மாலைகோவில் சங்க செயளர் K.நாகராஜன் உள்ளிட்ட தலைவர்கள் கோவிலை நேரில் பார்வையிட்டு சேதமடைந்த சிலையை சரிசெய்வது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.இப்போராட்டத்தால் போடிநகரில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved