🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வந்தேறி முழக்கம் அதிமுக மேடையில்! சீமான் பாணியில் மு.அமைச்சர்!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாகவும், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக களத்தில் இறங்கியும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இரண்டாம் கட்டத் தலைவர்கள் வீதி வீதியாகச் சென்று வாக்காளர்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அக்கூட்டத்தில் வெறித்தனமாக பேசிய முன்னாள் அமைச்சர் தமிழக முதல்வருக்கு சவால்விட்டபடி தடித்த வார்த்தைகளில் பேசினார்.

ஒருகட்டத்தில் மிகுந்த ஆவேசமாக பேசியவர் முதல்வரை ஒருமையில் பேசியதோடு, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பச்சைத் தமிழன் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலினை வந்தேறி என்றும் கூறினார். பொதுவாக சீமான் உள்ளிட்ட போலி தமிழ்தேசியவாதிகள் தெலுங்கர்களை குறித்து வந்தேறி என்று விமர்சிப்பது வழக்கம். தற்போது அவர்கள்கூட  வேறுபிரச்சினைகளை பேசிவரும் நிலையில், பிரதான திராவிடக்கட்சியான அதிமுக-வின் முன்னனி தலைவர் ஒருவர் தமிழக முதல்வரை வந்தேறி என்று பேசியுள்ளது தெலுங்குமொழி பேசுவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசிய தெலுங்கு சமுதாய தலைவர் ஒருவர், தமிழக முதல்வர் ஸ்டாலின் வந்தேறி என்றால் அதிமுக-வின் நிறுவனர் எம்.ஜி.ஆர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் யார் என்பதை முன்னாள் அமைச்சர் விளக்குவாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கனவே அதிமுக வழிகாட்டுதல் குழுவில் தெலுங்குமொழி பேசுவோர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், மதுசூதனன் வகித்துவந்த அவைத்தலைவர் பதவியை வெறொருவருக்கு வழங்கியதால்  ஜெயலலிதா மறைவிற்குப்பிறகு அதிமுக-வில் தெலுங்கு மொழி பேசுவோருக்கான வாய்ப்புகள் குறைக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு இருந்துவரும் நிலையில் அதிமுக-வின் முன்னனி தலைவரின் பேச்சும் அதை உறுதிப்படுத்துவதுபோல் தெரிகிறது. முன்னாள் அமைச்சரின் இப்பேச்சை எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் கண்டிக்காதது வருத்தமளிப்பதாக அவர் தெரிவித்தார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved