🔴 LIVE | முப்பெரும் விழா 2023


DNT-க்கு 200 கோடி ஒதுக்கீடு! DNT சாதி சான்றிதழ் வாங்கிவிட்டீர்களா?

மத்தியில் மோடி பிரதமராக பொறுப்பேற்றபின் 2015-ஆம் ஆண்டு சீர்மரபு பழங்குடி, நாடோடி, அரைநாடோடி மக்களுக்கு தேசிய ஆணையம் நிறுவப்பட்டது. இந்த ஆணையம் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையின் கீழ் செயல்பட்டுவருகிறது.இந்தியாவில் ஏறக்குறைய 13 கோடி மக்கள் குற்றப்பழங்குடிகள் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் அம்மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 1950 முதல் அனந்தசயன அய்யங்கர் ஆணையம், ரோஹிணி ஆணையம்,  இதாதே ஆணையம் போன்ற பல்வேறு ஆணையங்கள் பல பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இதாதே ஆணையம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு செய்து அறிக்கை வழங்கியுள்ளது.

இந்த பரிந்துரையின் அடிப்படையில் Scheme for Economic Empowerment Of Denotified/Nomadic/Semi Nomadic (SEED) Communities சீர்மரபு பழங்குடி/நாடோடி மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இலவச பயிற்சி,  இன்சூரன்ஸ், வீட்டுவசதி, தொழில் (வாழ்வாதாரம்) ஆகிய நான்கு பிரிவுகளில் தலா 50 கோடி வீதம் ரூபாய் 200 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கான பயனாளிகளை நேரடியாக ஆணையம் தேர்ந்தெடுக்க உள்ளது. இதன் பலனை முழுமையாக நமது சமுதாயம் பயன்படுத்திக்கொள்ள மாணவச்செல்வங்கள் உள்ளிட்ட அனைவரும் விரைவில் DNT சான்றிதழ் வாங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இதுகுறித்து மேலும் விபரங்களை அறிய www.thottianaicker.com இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு (vkrsnsgroup@gmail.com) DNT சாதி சான்றிதழ், தொடர்பு எண் விபரங்களை அனுப்பி வைக்கவும்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved