🔴 LIVE | முப்பெரும் விழா 2023


டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதி அறிவிப்பு.

தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2, குரூப்-2ஏ  தேர்வுகள் குறித்த அறிவிப்பை  சென்னை பிராட்வேயில் உள்ள  தலைமையகத்தில் நேற்று வெளியிட்டார் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன். 

அதன்படி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் வரும் மே 21-ந் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இதில் குரூப்-2 தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது.

தேர்வு எழுத விரும்புவோர் பிப்ரவரி 23 முதல் மார்ச் 23 ஆம் தேதி வரை http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 

தமிழில் தேர்வெழுத விரும்புவோருக்கு தமிழில் 100 கேள்விகள், பொது அறிவில் 75 கேள்விகள், ஆப்டிட்யூடில் 25 என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும்.

ஆங்கிலத்தில் தேர்வெழுத விரும்புவோர், பொது ஆங்கிலத்தில் 100 கேள்விகள், பொது அறிவில் 75 கேள்விகள், ஆப்டிட்யூடில் 25 என மொத்தம் 200 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். 

200 கேள்விகளுக்கு வழங்கப்படும் மொத்த மதிப்பெண்கள் 300. இதில் 90 மதிப்பெண்களுக்கு கீழே பெறுபவர்கள் தேர்ச்சி பெறமாட்டார்கள் .

இந்த ஆண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.

இத்தேர்வின் முடிவுகள் வரும் ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டும்.

இத்தேர்வில் வெற்றி பெருபவர்களுக்கு முதன்மை எழுத்துத்தேர்வு செப்டம்பரில் நடைபெறும். டிசம்பர் 2022 - ஜனவரி 2023 மாதங்களில், கலந்தாய்வு மற்றும் நேர்முக தேர்வு நடைபெறும்.

முக்கிய மாற்றமாக இதுவரை டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்று வந்ததை மாற்றி இந்த ஆண்டு முதல் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும்.எனினும் பிற்பகலில் நடைபெறும் தேர்வுகள் வழக்கம்போல் எந்தவித மாற்றமும் இன்றி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved