🔴 LIVE | முப்பெரும் விழா 2023


200 கோடி முந்துபவர்களுக்கே முன்னுரிமை!

மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் சார்பில் நாடுமுழுவதுமுள்ள DNT சமுதாய மக்களுக்கு உதவுவதற்காக ரூ.200 கோடியை ஒதுக்கி கடந்தவாரம் உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தினை  17-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் திரு..... துவக்கி வைத்தார். DNT தேசிய ஆணையம் அமைக்கப்பட்ட பின் முதற்கட்டமாக மத்திய அரசு இதனை செயல்படுத்தியுள்ளது. பயிற்சி, வீடு, மருத்துவ காப்பீடு, சுயதொழில் ஆகியவற்றிக்கு இந்த  நிதி பயன்படுத்தப்பட உள்ளது. பயனாளிகள் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தேர்வு  செய்யப்படவுள்ளனர்

இத்திட்டதில் பலன்பெறுவதற்கு DNT சாதிச்சான்றிதழ் பெற்றிருப்பது அவசியம். தமிழகத்தில் இதுவரை ஒரு சதவீதத்திற்கும் குறைவான தொட்டிய நாயக்கர் சமூகத்தினரே DNT சாதி சான்றிதழ் பெற்றுள்ள நிலையில் மத்திய அரசு வழங்கும் உதவி குறித்தான விழிப்புணர்வு இளைஞர்களிடையே முற்றிலும் இல்லை. எதிலும் அக்கறையில்லா மெத்தனப்போக்கு இதிலும் தொடர்வது வேதனையான விசயமே. 

ஏற்கவேண்டும் DNT ஆணையங்கள் இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை வழங்கியிருப்பதால் வருங்காலங்களில் பல ஆயிரம் கோடிகளை மத்திய அரசு ஒதுக்கவுள்ளதாக நிகழ்ச்சியில் பேசியவர்கள் குறிப்பிட்டனர். எனவே இப்பலனை பெறுவதற்கு சமுதாயத்தை தயார் படுத்தவேண்டிய அவசியமும்,  பொறுப்பும் உள்ளதால் அதை எப்படி வெகுஜன மக்களிடையே கொண்டு சேர்ப்பது என்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நேற்று (20.02.2022) மாலை நாமக்கல்லில் நடைபெற்றது. 

தொட்டிய நாயக்கர் கல்வி அறக்கட்டளை ஏற்பாட்டில் தலைவர் மு.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மூத்த வழக்கறிஞர் நாமக்கல்.பழனிசாமி, சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள நலச்சங்க பொதுச்செயலாளர்.செந்தில்குமார், விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் அறக்கட்டளை செயலாளர்.துரைசாமி, பொருளாளர் சின்னுசாமி,  அமைப்பு செயலாளர். சரவணன்,  தலைமையிடச் செயலாளர். மணி,  மூத்த உறுப்பினர் நாகப்பன்,   துணைத்தலைவர் ஈஸ்வரன், பரமத்தி ஒன்றிய பொருப்பாளர் தங்கவேல்,  புதுச்சத்திர ஒன்றிய பொருப்பாளர் தங்கராசு, வழக்கறிஞர் பிரிவு செயலர்.சதீஷ்,  காந்தியவாதி ரமேஷ், தங்கவேல், மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இக்கூட்டத்தில் அறக்கட்டளை மேற்கொள்ளவேண்டிய பணிகள், பயிற்சி வகுப்புகள் தொடங்குவதற்கான ஏற்பாடு, உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இட ஒதுக்கீடு வழக்கில் கூடுதலாக ஒரு மூத்தவழக்கறிஞர் நியமிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved