🔴 LIVE | முப்பெரும் விழா 2023


விடுதலைக்களம் முதல் வெற்றி!

2021-இல் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் ஈரோடு மாவட்டம், அந்தியூர் சட்டமன்றத்  தொகுதியில் விடுதலைக்களம் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பிரதாபன் 2500 க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றார்.  இத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் 1400 வாக்குகள் குறைவாகப்பெற்று திமுக வேட்பாளரிடம் வெற்றியை பறிகொடுத்தார்.  கொங்குமண்டலத்தில் முழுமையான வெற்றியை பறிகொடுத்த திமுக வெற்றி பெற்ற ஒருசில இடங்களில் அந்தியூர் சட்டமன்றத் தொகுதியும் ஓன்று. இதனால் இரு கட்சிகளின் தலைமையின் கவனத்தையும் அத்தொகுதி பெற்றது. 

தற்பொழுது அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூகளூர் பேரூராட்சி 13-வது வார்டில் விடுதலைக்களம் கட்சியின் சார்பில் தென்னை மரம் சின்னத்தில் போட்டியிட்ட திருமதி.பி.சுதா வெற்றிபெற்றுள்ளார். இதன் மூலம் தேர்தல் அரசியல் களத்தில் முதல் வெற்றியை விடுதலைக்களம் கட்சி பதிவு செய்துள்ளது. 

இந்தவார்டில் பதிவான மொத்த வாக்குகள் 481. இதில் விடுதலைக்களம் கட்சியின் பி.சுதா 218 வாக்குகளும், திமுக வேட்பாளர் 180 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் 75 வாக்குகளும், பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் 8 வாக்குகளும் பெற்றனர்.

பேரூராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுதாவிற்கு அக்கட்சியின் தலைவர் கொ.நாகராஜன், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved