🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வெற்றிக்கனியை பறித்த கம்பளத்தார்கள்!

தமிழகத்தில் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே ஆளும்கட்சி கூட்டணியின் ஆதிக்கம் இருந்தது. அதனையடுத்து EVM இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும்பணி தொடங்கியது. அதிலும் ஆளும் கூட்டணிக்கட்சிகளின் முன்னிலை தொடர்ந்தது. வாக்கு எண்ணும்பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என அனைத்திலும் திமுக கூட்டணி 85 முதல் 90 விழுக்காடு இடங்களைப்பெற்று பிரமாண்ட வெற்றியை நோக்கி செல்கிறது.


இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நமது கம்பளத்தார் சமுதாயத்தின் சார்பில் ஏறக்குறைய எல்லா பிரதானக்கட்சிகளில் இருந்தும் மாநிலம் முழுவதிலுமிருந்து வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர்.


தற்போது கிடைத்துள்ள செய்தியின்படி மாநகர மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட்டவர்களில் திருப்பூர் மாநகராட்சியில் 33-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட திருமதி.தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், 6-வது வார்டில் திமுக சார்பில் போட்டயிட்ட M.தாமோதரன், கரூர் மாநகராட்சி 47-வது வார்டில் திமுக வேட்பாளர் வைகோ.பழனிச்சாமி ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.


அதேபோல் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சி திமுக சார்பில் போட்டியிட்ட திருமதி.ஜெயந்தி மணிகண்டன், 2-வது வார்டில் போட்டியிட்ட திருமதி.சங்கீதா ஆனந்தகுமார்,கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் திரு.நல்லேந்திரன், ஈரோடு மாவட்டம், பள்ளபாளையம் பேரூராட்சியில் அதிமுக சார்பில் 2-வது வார்டில்  திரு.பொ.தங்கமணி, 11-வது வார்டில் திரு.மு. துரைசாமி, அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் சுயேச்சை வேட்பாளர் திரு.மகேந்திரன், இராஜபாளையம் நகராட்சியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட திருமதி.P.ராதா, நாமக்கல் மாவட்டம் குமரபாளையம் பேரூராட்சியில் திருமதி.சித்ரா,பழனி , ஆயக்குடி பேரூராட்சியில் போட்டியிட்ட திருமதி.சுதாமணி கார்த்திகேயன் ஆகியோர் அமோக வெற்றி வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


முழுவிபரம் நாளை வெளியாகும்...

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved