🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வில்சனுக்கு குட்டு! - வெற்றிகனியை பறிக்குமா இட ஒதுக்கீடு வழக்கு!

வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடை  சென்னை, உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்ததை அடுத்து உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நேற்றும் 4 வது நாளாகத் தொடர்ந்தது.

நேற்றைய விசாரணையின் போது மனுதாரர் தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதாடினார். மற்றொரு மனுதாரர்களான மருத்துவர் ராமதாஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் C.S.வைத்தியநாதன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாதிட்டனர்.

வழக்கறிஞர் வில்சன் வாதிடும் பொழுது,  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர் நீதிபதி. ஜனார்த்தனம் தலைமையிலான குழுவின் பரிந்துரைப்படியே வன்னியருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டதாக கூறிப்பிட்டார்.

உடனே குறுக்கிட்ட நீதியரசர்.நாகேஸ்வர ராவ், அக்குழுவில் ஜனார்த்தனம் மட்டுமே வன்னியர் இடஒதுக்கீட்டிற்க்கு பரிந்துரை செய்துள்ளதாகவும்,  மற்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளதை சுட்டிக்காட்டினார். அதற்கு பதிலளித்த வில்சன், அக்குழுவில் ஜனார்த்தனன் மட்டுமே நீதிபதி என்று குறிப்பிட்டார். அந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள் 6 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வில் ஒருவர் வழங்கும் தீர்ப்பு செல்லுபடியாகுமா? அல்லது மெஜாரிட்டி நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு செல்லுபடியாகுமா? என்று எதிர்க்கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து வில்சன் வேறு விஷயங்கள் குறித்து வாதிட்டார். இதனால் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த மேற்கொண்ட முயற்சியை நீதிபதிகள் முறியடித்தனர். 

மூத்த வழக்கறிஞர் வில்சன் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மறைந்தபொழுது சென்னை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய அன்றைய அதிமுக தலைமையிலான  அரசு மறுத்தபோது உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து தன் வாதத்திறமையால் அனுமதி பெற்றுக்கொடுத்தவர் என்பதும், மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு மத்திய அரசு இடஒதுக்கீடு வழங்க மறுத்தபோது, அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு பெற்று தந்ததின் மூலம் அகில இந்திய அளவில் கவனத்தைய பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட 2 வழக்குகளில் இருந்த நியாயமான காரணங்கள், இயற்கை நீதி, சட்டபடியான உரிமை, வன்னியர் இடஒதுக்கீடு வழக்கில் இல்லாத பொழுது, ஒரு சமுதாய வாக்குகளைப்பெற 118 சமுதாயங்களின் உரிமைகளை பறிக்கும் முயற்சிக்கு துணை போனதால் உச்சநீதிமற்றத்தில் குட்டுபட்டார். 

நேற்று மனுதாரர்களின் தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றதையடுத்து,  நமது தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாதிட்டார். அப்பொழுது 102 மற்றும் 105- வது அரசியல் சாசன திருத்தங்கள் குறித்து பல்வேறு நீதிமன்றங்கள் வழங்கியுள்ள தீர்ப்புகளை மேற்கோள்காட்டி வாதிட்டார். 

இந்த வழக்கின் விசாரணை இன்றும் தொடரவுள்ளது. இதில்  நமது தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ராஜீவ் தவான், நாகமுத்து, கர்னல் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் வாதிட உள்ளனர். 

இந்த வழக்கு விசாரணையில் வழக்கறிஞர் வாதங்கள் இன்றுடன் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து உச்சநீதிமற்ற தீர்ப்பு ஒரு சில வாரங்களில் வெளியாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved