🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வன்னியர் இடஒதுக்கீடு வழக்கு! உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவங்கள்!

வன்னியர் இடஒதுக்கீடு மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின்போது பல்வேறு சுவாரசியமான சம்பவங்கள் நடைபெற்றது தற்பொழுது வெளியாகியுள்ளது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவராக இருந்த நீதிபதி.ஜனார்த்தனம் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்த பொழுது , அக்குழுவில் இருந்த 6 உறுப்பினர்கள் (முனைவர்.ராஜேந்திரன் IAS, போராசிரியர். சுந்தரம், முனைவர்.தியாகராஜன், முனைவர்.தாண்டவம், முனைவர். முத்துக்குமார், முருகானந்தம்) ஆகியோர் தேவையில்லாமல் இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக கருத்து பதிவு செய்தனர் என்று வாதிட்டார். 

அப்பொழுது குறிக்கிட்ட நீதியரசர்.நாகேஷ்வரராவ், ஆறு பேர் சொல்வது சரியா? ஒருவர் சொல்வது சரியா? ஆறு பேரும் காரணங்களை குறிப்பிட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தேவையில்லாத கருத்தாக எப்படி எடுத்துக்கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பினார். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தாமலே, ஆணையத்தின் தலைவர் தன்னிச்சையாக அறிக்கையை தயாரித்து, சம்பவம் நடந்த அன்று காலையில் தான் எங்களிடம் கொடுத்து உடனடியாக கையெழுத்து போடச்சென்னார். நாங்கள் படித்து பார்க்க வேண்டும் என்று கேட்டபொழுது உடனடியாக கையெழுத்திட வற்புறுத்தினார். ஆகையால் நாங்கள் அனைவரும் எதிர்த்து கையெழுத்திட்டோம் என்று நெத்தியடியாக சுட்டிக்காட்டினார் நீதியரசர்.

விடுவாரா வில்சன்? அவர்தான் கலைஞர் சமாதி, மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி-க்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழக்குகளில் ஆஜராகி சரித்திர சாதனை படைத்தவராயிற்றே!. நீதிபதி அவர்களே, ஜனார்த்தனம் ஒரு முன்னாள் நீதியரசர்,  அவரை மற்ற ஆறு பேரோடு ஒப்பிடக்கூடாது என்று தன் மேதாவித்தனத்தைக் காட்ட முயன்றார்.

உடனே நீதியரசர்.நாகேஷ்வரராவால் சிரிப்பை அடக்கமுடியாமல் சத்தம்போட்டே சிரித்துவிட்டார். 

என்னமா யோசிக்கறாங்கடா என்று நினைத்தவாரே நீதியரசர் கேட்டிருப்பார் போலும், என்ன சொல்கிறீர்கள் Mr.வில்சன்? ஒரு கமிசனில் உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களும் தகுதியுடையவர்கள் தான். ஒரு நீதிமன்ற அமர்வில் 7 நீதியரசர்கள் இருந்தால் சொல்வது ஜன்ஜ்மென்டா? 6 பேர் சொல்வதா என்றார். ஒருவழியாக நீதியரசரே தன்னை சமாதானப்படுத்திக்கொண்டு,  Mr.வில்சன், இதை விடுங்கள். வேறு எதையாவது பேசுங்கள். ஜனார்த்தனம் ரிப்போர்ட்டு பேசத்தகுந்தது அல்ல என்றார். 

என்னடா, அம்பாசங்கர், ஜனார்த்தனம், தணிகாச்சலம்ன்னு சொல்லித்தானே நாம இத்தனை நாளா வண்டி ஓட்டிக்கிட்டு இருக்கோம். இந்தாளு என்னடானா எல்லா பர்னிச்சரையும் ஒடச்சுட்டாரேன்னு  ஒரு மைண்ட்வாய்ஸ்.

அடுத்து பாமக சார்பாக களமிறங்கிய  மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் பேச ஆரம்பித்தார். பாமகவுக்கு 8/2021 சட்டம் வந்ததிலிருந்தே போதாத காலம்ன்னு நமக்குத்தான் தெரியுமே. அதுதான் உச்சநீதிமன்றத்திலும் நடந்தது. பொசிசனை எடுக்கக்கூட நீதிபதிகள் அனுமதிக்கல. மிஸ்டர் ராதாகிருஷ்ணன் உங்களை வார்ன் பண்ணுறேன். உங்கள் தரப்பு வழக்கறிஞர்கள் சென்னதையே திருப்பி நீங்களும் சொல்லாதீங்க. இந்த லெவலில் போனா இன்னும் ஒருமாசம் ஆகும். நிறைய வழக்கறிஞர்களை அரசும், மேல்முறையிட்டாளர்களும் அமர்த்தியிருக்காங்க. 

ஒரே விசயத்தை எத்தனை முறை கேட்பது? சில விசயங்களை பத்தாவது முறையாக கேட்கிறோம். இதுவரை பேசிய வழக்கறிஞர்கள் ஜனார்த்தனம் கமிட்டி, மெஜாரட்டி மெம்பர்கள், 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பற்றி பேசவில்லை என்கிறீர்கள். 69 சதவீத இடஒதுக்கீடு பற்றி இந்த நீதிமன்றம் இப்போது விசாரிக்கவில்லை. உள்ஒதுக்கீடு பற்றி மட்டும் இப்போது பேசுங்கள் மிஸ்டர்.ராதாகிருஷ்ணன், இதையும் மீறி நீங்கள் நீதிமன்றத்தின்  நேரத்தை எடுத்துக்கொண்டால் உங்களை முடிக்கசொல்ல வேண்டி வரும் என்று சொல்லி நீதியரசர்கள் சிரிக்க, அவரு வெச்சுட்டு என்ன வஞ்சகமா பண்றாரு யுவர் ஆனர் என்ற வடிவேலு டயலாக் ஞாபகம்.

வன்னியருக்கு உள்ஒதுக்கீடு வழங்கியதிற்கான அடிப்படை காரணங்கள், தரவுகள் குறித்து நீதியரசரகள் கேள்வியெழுப்பியபொழுது வழக்கறிஞர்களால் நீதிமன்றத்தை திருப்தியடையச் செய்யமுடியவில்லை அதற்கு பதிலாக நீதிமன்றத்தை திசை திருப்பவே முயன்றார்கள்.அதில் அவர்களுக்கு வெற்றிகிட்டியதாக தெரியவில்லை.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved