🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கம்பளத்தாருக்கு இலவச பயிற்சி, வீடு, மருத்துவக்காப்பீடு வழங்க மத்திய அரசு சிறப்பு சலுகை!

சீர்மரபினர் பழங்குடி (DNT)  மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ரூ.200 கோடி மதிப்பீட்டிலான  சிறப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர்.வீரேந்திரகுமார் காதிக், இத்திட்டத்தின் கீழ் பலன்களைப் பெறுவதற்கு தடையற்ற பதிவுகளை உறுதி செய்வதற்காக ஒரு பிரத்யேக போர்ட்டலை கடந்த வாரம் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தொடங்கிவைத்தார்.

அப்பொழுது பேசிய அமைச்சர் இந்த இணையதளம் சீர்மரபு பழங்குடிகள், நாடோடி, அரை நாடோடி சமூகங்களின் தரவுகளின் களஞ்சியமாகவும் இது செயல்படும் என்றார்.தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள SEED-திட்டத்தின்படி DNT,SNT,NT  சமுதாய மாணவர்களுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வுகள் (UPSC), தொழில்முறை (Engineering) படிப்புகளில் சேருவதற்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி அளிக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும். இது தவிர  மருத்துவ காப்பீடு, வாழ்வாதார ஆதரவு மற்றும் வீட்டுவசதி என தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் முதற்கட்ட சேவையை அளிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தத் திட்டம் சீர்மரபு பழங்குடிகளின் முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக செய்யப்படும் முதல் சிறிய முயற்சியாகும், ஆனால் பல ஆண்டுகளாக அரசின் புறக்கணிப்பு மற்றும் அக்கறையின்மைக்கு ஆளாகியிருக்கும் இந்த சமூகங்களுக்கு இது கடைசி அல்ல என்றார் அமைச்சர். ஒதுக்கப்பட்ட பழங்குடியினர், நாடோடி பழங்குடியினர் மற்றும் அரை நாடோடி பழங்குடியினர் மிகவும் புறக்கணிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூகங்களில் உள்ளனர்.பெரும்பாலானவர்கள் ஏழ்மையான வாழ்க்கையை வாழ்கின்றனர். இலவசப் பயிற்சித் திட்டம், அவர்கள் போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளவும், மருத்துவம், பொறியியல், வணிக நிர்வாகம் மற்றும் பிற துறைகளில் வாய்ப்புகளைத் திறக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

"தோராயமாக, ஐந்து ஆண்டுகளில் 6,250 மாணவர்களுக்கு இந்த கூறுகளின் கீழ் இலவச பயிற்சி வழங்கப்படும். ஐந்து ஆண்டுகளில் செலவழிக்கப்பட்ட மொத்த நிதி ரூ. 50 கோடியாக இருக்கும்" என்று ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 4,44,500 குடும்பங்கள், ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் ஐந்தாண்டு காலத்திற்கு மட்டும் 49 கோடி ரூபாய் செலவில் காப்பீடு செய்யப்படும்.

இச்சமுதாய மக்களின் வீடுகள் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, இச்சமூகங்களுக்கு மட்டுமே வீடுகள் வழங்குவதில் குறிப்பிடத்தக்க வகையில் முக்கியத்துவமளித்து  பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) க்கு தனி செலவினத்தை ஒதுக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. தோராயமாக, இந்த கூறுகளின் கீழ், ஐந்து ஆண்டுகளில், 4,200 வீடுகள் கட்டப்படும். ஐந்து ஆண்டுகளில், மொத்த நிதி, 50 கோடி ரூபாயாக இருக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் (NRLM) கீழ், இந்த சமூகங்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு அரசாங்கம் கிட்டத்தட்ட 2000 தொகுப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. வரலாற்று ரீதியாக, இந்த சமூகங்கள் ஒருபோதும் தனியார் நிலம்,குடியிறுப்புகள், காடுகள்,மேய்ச்சல் நிலங்களையும் தங்கள் வாழ்வாதாரத்திற்கும் குடியிருப்பிற்கு பயன்பாட்டிற்கும் ஆக்கிரமித்ததில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வாழும் லட்சக்கணக்கான தொட்டிய நாயக்கர் சமுதாய மக்கள்  DNT பிரிவில் வருவதால், மத்திய அரசின் திட்டங்களை முழுமையாக அயன்படுத்திக்கொள்ளும் வகையில் அனைவரும் உடனடியாக DNT சான்றிதழ் வாங்கிட வேண்டும்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved