🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கம்பளத்தாருக்கு DNT ஒற்றைச்சான்றிதழ் வழங்குக!- விடுதலைக்களம் கோரிக்கை

விடுதலைக் களம் கட்சி ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் 27.02.2022 காலை 10 மணிக்கு கட்சியின் நிறுவனத் தலைவர் கொ.நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நாமக்கல் வடக்கு மாவட்டத் தலைவர் துரை ரமேஷ், வடக்கு மாவட்டச் செயலாளர் துரை சரவணன், நாமக்கல் தெற்கு மாவட்டத் தலைவர் மாதேஸ்வரன், தெற்கு மாவட்டப் பொருளாளர் தங்கவேல், நாமக்கல் நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், நாமக்கல் நகரத் தலைவர் முரளி (எ) ரங்கசாமி, நாமக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் செங்கோட்டுவேல், திருச்செங்கோடு ஒன்றியச் செயலாளர் கதிர்வேல், நாமக்கல் வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பூபதி, பரமத்தி ஒன்றியச் செயலாளர் போத்தன் (எ) ரங்கசாமி, மாநில பொறுப்பாளர் பூவரசி ராஜேந்திரன் உட்பட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

1. சுதந்திரப் போராட்ட தியாகி டாக்டர் வரதராஜூலு நாயுடுவுக்கு தமிழக அரசு மணிமண்டபம் நிறுவ வேண்டும் என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

2. திராவிட முன்னேற்றக்கழகம் கடந்த 40 ஆண்டுகளாக 40 லட்சம் மக்கள் தொகையோடு மாநிலம் முழுவதும் பரவலாக வாழ்ந்து வரும் இராஜகம்பளத்து தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினருக்கு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினையோ, வாரியங்கள் உள்ளிட்ட நியமனப்பதவிகளையோ வழங்கியது இல்லை. அகில இந்திய அளவில் சமூக நீதி கூட்டமைப்பை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள இராஜகம்பளத்து தொட்டிய நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மேயர், துணைமேயர், நகர,பேரூராட்சி தலைவர் வாய்ப்பினை வழங்குமாறு விடுதலைக்களம் கட்சி வலியுறுத்துகிறது. 

3. தமிழக முதல்வர் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் அளித்த வாக்குறுதிப்படி தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சீர்மரபினர் சமுதாயங்களுக்கு DNT ஒற்றைச்சான்றிதழ் வழங்க வேண்டும். 

4. மத்தியஅரசு கேட்டுக்கொண்டதுபோல் DNT சமுதாய மக்களின் சமூக, பொருளாதார புள்ளி விபர கணக்கெடுப்பு நடத்த உரிய அதிகாரியை நியமிக்க மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். 

5. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்திட விடுதலைக்களம் கட்சி வலியுறுத்துகிறது. 

6. மதுரை, தேனி,திண்டுக்கல் மாவட்டங்களில் வாழும் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினருக்கு DNC/DNT சான்றிதழ் வழங்க தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

7. நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved