🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பற்றும் - ஒற்றுமையும் தேவை மக்களிடமா? தலைவர்களிடமா?

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சிகளில் சீட் பெறுவதிலிருந்து, தலைவர், துணைத்தலைவர் பதவி பெறுவது வரை கட்சிகளில் பயணிப்பவர்கள் பிரசவகால வழியை சந்தித்து, சிலர் வெற்றியும் பலர் தோல்வியையும் சந்தித்துள்ளனர். 

அதில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக போன்ற கட்சிகளில் போட்டியிட மிக சொற்பமான இடங்களையே பெற்றபோதிலும், முதற்கட்டத்தை தாண்டுவதற்கே பலரால் தாக்குப்பிடிக்க முடியாமல் போனது தான் நிதர்சனம்.

வாய்ப்புள்ள இடங்களில் போட்டியிடும் வாய்ப்பை பெறுவதற்கு எழுந்த சொந்த சாதி உட்பகை பல இடங்களில் கிடைத்த சொற்ப வாய்ப்புகளையும் பறித்துக்கொள்கிறது. 

தாங்கள் தேர்தலில் நிற்கும்பொழுது சாதிய பாசத்தை மக்கள் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றவர்கள், தாங்கள் சாதி மக்கள் மீதோ அல்லது சொந்த சமுதாயத்தைச் சேர்ந்த பிரிதொருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் போது, வாய்ப்பு கிடைக்காதவர் கிடைத்தவருக்கு முட்டுக்கட்டை போடுவதில் முன்னனியில் இருப்பதை யாரும் இதுவரை கேள்விக்கு உட்படுத்தியதில்லை. 

அதேபோல் ஒருசில பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போதிலும், அங்கு தங்களை பிரதிநிதித்துவப்படுத்திக்கொண்டு தங்கள் உரிமையை நிலைநாட்டும் வகையில் தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட பதவிகளை பெறமுயற்சிக்காமல் அமைச்சர் பெருமக்களிடம் தங்கள் ராஜ விசுவாசத்தை காட்ட முனைவது எல்லா கட்சிகளிலும், எல்லாக்காலங்களிலும் நடைபெற்றுவருவதாக விமர்சகர்களின் பார்வையாக உள்ளது.. இது மக்களின் எண்ணங்களுக்கும் தலைவர்களின் செயல்பாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருப்பது கண்கூடாக பார்க்க முடிகிறது. 

இந்த இடைவெளியை சரி செய்ய யார் என்ன  எதைச் செய்யவேண்டும் என்ற கேள்விக்கு அரசியலில் பயணிக்கும் தலைவர்களே விடைதேட வேண்டும்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved