🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கம்பளத்தாரின் இரண்டாம் கட்ட நிதியளிப்பு!

வன்னியருக்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சீர்மரபினர் (DNC/DNT) சமுதாயங்கள் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இடஒதுக்கீட்டை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வு தீர்ப்பு வழங்கியது. 

உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசும் பாட்டாளி மக்கள் கட்சியும் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. முதலில் தீர்ப்புக்கு இடைக்கால தடைபெறும் முயற்சியை முறியடித்த சீர்மரபினர் நலச்சங்கம் உள்ளடங்கிய சமூகநீதி கூட்டமைப்பு, இரண்டாவது கட்டமாக அரசியல்சாசன அமர்விற்கு வழக்கை மாற்றக்கோரும் தமிழக அரசின் முயற்சியையும் முறியடித்தது. 


முதலில் இந்தியாவில்  தலைசிறந்த மூத்த வழக்கறிஞர்களான அபிஷேக் சிங்வி, முகில் ரோத்தகி, வில்சன், ராகேஷ் திவேதி, வைத்தியநாதன் போன்ற வழக்கறிஞர் பட்டாளத்தை களமிறக்கி வழக்கு விசாரணையை தள்ளிப்போட நடந்த முயற்சிகளை ராஜீவ் தவான், நாகமுத்து,  கர்னல் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட வழக்கறிஞர்களை அமர்த்தி வெற்றிகரமாக முறியடித்தது சமூகநீதி கூட்டமைப்பு.

இதனையடுத்து நான்கு நாட்கள் நடைபெற்ற வழக்கு விசாரணையிலும் நமது தரப்பு வாதங்களை தெளிவாக எடுத்து வைத்துள்ளோம். 

உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கை நடத்துவதற்காக தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் ரூ.2,05000/- (ரூ.இரண்டு லட்சத்து ஐந்தாயிரம் மட்டும்) முதற்கட்ட நிதியாக வழங்கப்பட்டது. இதில் நமது சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் திரு.ராஜுவ் தவானுக்கு மட்டும் ரூ.1650000/- (ரூபாய். பதினாறு லட்சத்து ஐம்பதாயிரம்) வழங்கி உள்ளோம்.  இன்னும் மீதமுள்ள வழக்கறிஞர்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால் ரூ.100000/- (ரூ.ஒருலட்சம் மட்டும்) கூடுதலாக வழங்க வேண்டும் என சீர்மரபினர் நலச்சங்கம் வேண்டுகோள் வைத்துள்ளது.


இதனையடுத்து நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை சார்பில் ரூ.25000/- (ரூ.இருபத்தி ஐந்தாயிரம் மட்டும்) இரண்டாம் கட்டமாக வழங்கப்பட்டுள்ளது.  இந்த நிதியை அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி அவர்கள் சீர்மரபினர் நலச்சங்க வங்கிக்கணக்கிற்கு செலுத்தியுள்ளார். 

மீதமுள்ள நிதியை பொதுமக்களிடமிருந்து திரட்ட வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சென்னை, இராஜகம்பளத்தார் மேன்மக்கள் அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் நாமக்கல் அறக்கட்டளையுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. 

இந்த சட்டப்போராட்டத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமுள்ளவர்கள் இந்த அமைப்புகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved