🔴 LIVE | முப்பெரும் விழா 2023


DNT சாதி சான்றிதழ் கோரி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து 2021- சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டபொழுது, ஆலங்குளம் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு DNT ஒற்றைச் சாதிச் சான்றிதழ் வேண்டி போராடும் சமுதாயங்களை புறக்கணித்து விட்டதாகவும், திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்தவுடன் இந்தக்கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் திமுக அரசு பொறுப்பேற்றுக்கொண்டு ஓராண்டு நிறைவடையும் தருவாயில் இன்னமும் இக்கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. எனவே தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்ப்பதற்காக விடுதலைக்களம் கட்சியின் சார்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வரும் திங்களன்று காலை போராட்டம் நடத்த இருப்பதாக விடுதலைக்களம் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் நிறுவனர் கொ.நாகராஜன் கூறியிருப்பதாவது

1. டி.என்.டி. ஒற்றை ஜாதி சான்றிதழ் தமிழக அரசு உடனடியாக வழங்க  வேண்டும்.

2. மத்திய அரசின் உத்தரவின்படி தமிழகத்தில் டிஎன்டி கல்வி பொருளாதார மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திட தனி அலுவலரை நியமித்திட  வேண்டும்.

 3. தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பின் தான் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் திங்கள்கிழமை ( 21.03. 2022)  காலை 10 மணி  அளவில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

தமிழக முதல்வர் அவர்கள் சட்டமன்ற தேர்தல்  பிரச்சாரத்தின்போது  டி.என்.டி. சமுதாய மக்களுக்கு ஒற்றைச் சான்றிதழ் வழங்குவேன் என்று அளித்த வாக்குறுதியை நினைவுபடுத்தி முழக்கம் எழுப்பப்படும்.

வருங்கால சந்ததியினரின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளுக்காக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்  என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்

கொ.நாகராஜன் நிறுவனத்தலைவர், விடுதலைக்களம் கட்சி.

மு.பழனிச்சாமி அ.க.தலைவர், நாமக்கல்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved