🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கோட்டையை நோக்கி பேரணி! போராட்டகளத்திற்கு தயாராகும் விடுதலைக்களம்!

விடுதலைக்களம் அமைப்பு கட்சியாக பதிவு செய்யும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கட்சியை வலுப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டங்களை வட்டார ரீதியாக நடத்துவதென தீர்மானித்து, அதன் முதல் கூட்டத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை (27.03.3022) நாமக்கல் மற்றும் திருச்சியிலும் நடத்தி முடித்துள்ளது.

நாமக்கல்லில் உள்ள தனியார் மஹாலில் நாமக்கல் நகர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட இந்த ஆலோசனை கூட்டத்தில் நகர நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். கட்சியின் வளர்ச்சி குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன. 

இக்கூட்டத்தின் முக்கிய கருத்தாக தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியளித்தபடி  DNT ஒற்றை சான்றிதழ் வழங்காததை கண்டித்து தொட்டியநாயக்கர் உள்ளிட்ட 68 சமூகத்துடன் கோட்டையை நோக்கி பேரணிக் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

நாமக்கல் நகர தலைவர் முரளி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நாமக்கல் நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார்.தொட்டியநாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி நாமக்கல் தெற்கு மாவட்ட தலைவர் OST.R.மாதேஸ்வரன், மாவட்ட செயலாளர் நடராஜன், பொருளாளர் தங்கவேலு, மாநில பொறுப்பாளர் ராஜேந்திரன் மேற்கு மாவட்ட தலைவர் செங்கோட்டுவல், வடக்கு மாவட்ட தலைவர் துரை.ரமேஷ்,செயலாளர் துரை சரவணன், திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் கதிர்வேல், பரமத்தி ஒன்றியம் ரங்கசாமி தெற்கு மாவட்ட இளைஞர் அணி சந்தோஷ்குமார் நன்றியுரை தங்கவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதேபோல் திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம் மேய்க்கல்நாயக்கன்பட்டியில் விடுதலைக்களம் கட்சி திருச்சி மேற்கு மாவட்ட ஆலோசனைக்கு கூட்டம் மதியம் 3.00 மணியளவில் அர்ச்சனா மஹாலில் மாவட்டத் தலைவர் பொம்மநாயக்கர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறுவனத் தலைவர் கொ.நாகராஜன்  சிறப்புரையாற்றினார். தொட்டியம் இளைஞரணி அமைப்பாளர் பிரபு மாவட்ட செயலாளர் ரங்கசாமி, நாமக்கல் நகர தலைவர் முரளி, நகர செயலாளர் பாலசுப்பிரமணி, மாநில பொறுப்பாளர் பூவரசி ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் திருச்சி மேற்கு மாவட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved