🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை உறுப்பினர் சேர்க்கை தீவிரம்!

இராஜகம்பளத்தார் சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் பிரதானமானது நாமக்கல் மாவட்டம். ஏறக்குறைய 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கம்பளத்தார் சமுதாய மக்கள் பூர்வீகமாக நிலவுடமையுடன் வசித்து வருகின்றனர். வறட்சி மிகுந்த மாவட்டமாக இருந்தாலும் தொழில்துறையில் முன்னோடி மாவட்டமாக உள்ளது. கடந்த இரு தலைமுறைகளாகவே கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இம்மாவட்ட மக்கள் அதிக அளவில் அரசியல், மென்பொருள், தொழில், அரசுத்துறை என அனைத்திலும் முன்னனியில் உள்ளனர். இயல்பாகவே சமுதாயப்பற்று மிக்க இம்மாவட்ட மக்கள் அடுத்த தலைமுறைக்கான தேவைகளை உணர்ந்து பணியாற்றி வருகின்றனர். அதன் பயனாக அரசுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களும், தொழில்துறையில் சிறந்து விளங்குபவர்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து நாமக்கல், தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை என்ற பெயரில் அமைப்பை உறுவாக்கி செயலாற்றி வருகின்றனர்.


நாமக்கல் மாவட்ட அளவிலோடு நின்றுவிடாமல் சென்னையில் ஓங்கி வளர்ந்துள்ள இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் கட்டுமானப்பணி, வன்னியர் இடஒதுக்கீடு வழக்கு, DNT ஒற்றைச்சான்றிதழ் கோரி போராட்டம் என அனைத்திலும் பங்கேற்று சமுதாயத்தை முன்னிலைப்படுத்தி வருகின்றனர். இதன் பயனாக தொட்டிய நாயக்கர் என்ற பெயர் இன்று சமூக ஊடகங்களிலும், இன்னபிற நிலைகளிலும் பேசப்பட்டு வருகிறது. இதனால் சமுதாயத்திற்கு தனித்த அடையாளம் உருவாகியுள்ளது.


இந்த அறக்கட்டளைக்கு குறைந்த பட்சம் 10000 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று திட்டமிட்டு கலமிறங்கியவர்கள் உறுப்பினர் சந்தா கட்டணமாக ரூ.5000/- நிர்ணயம் செய்துள்ளனர். வெளிநாடு, வெளிமாநிலம், வெளியூர்களில் வசிப்பவர்கள் கூட அறக்கட்டளை உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். ஆரம்பிக்கப்பட்ட ஒருசில ஆண்டுகள் தீவிரமாக பணியாற்றிவந்த நிலையில் அறக்கட்டளையின் பொதுச்செயலாளரும், முன்னாள் டிஎஸ்பியுமான திரு.ரங்கசாமி அவர்கள் காலமானதும், அதற்கடுத்து கொரோனோ பெருந்தொற்று ஆட்டிப்படைத்ததும் உறுப்பினர் சேர்க்கையை தாமதப்படுத்தி வந்தது. இருந்தும் இந்த இடைப்பட்ட காலங்களில் இடஒதுக்கீடு வழக்கு, DNT போராட்டம் என ஒட்டுமொத்த சமுதாயத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளதை மறுக்கமுடியாது.


கொரோனோ பெருந்தொற்று சற்று குறைந்து கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில் மீண்டும் உறுப்பினர் சேர்க்கையை அறக்கட்டளையின் முன்னனி தலைவர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் அறக்கட்டளை உறுப்பினர் சந்தா தொகையான ரூபாய்.5000/- செலுத்தி அறக்கட்டளை உறுப்பினர் ஆகியுள்ளார். 


இதனைத்தொடர்ந்து, திருச்செங்கோடு வட்டம் பொட்டிலிபாளையத்தைச் சேர்ந்த திரு.சி.துரைராஜ் M.E., திரு.ப.விசு.B.E.,அக்கமாபாளையத்தைச் சேர்ந்த  திரு.M.சத்தியராஜ், திரு.M.விஜயகுமார், திரு.M.மகேந்திரன், ராமநாதபுரம் (கொக்ராயன்பேட்டை), திரு.ர.கிருபாகரன், வரப்பாளையம் திரு.ர.நாகராஜ் ஆகியோர் அறக்கட்டளை தலைவர் திரு.மு.பழனிச்சாமி முன்னிலையில் முழுநேர உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.


கடந்த ஞாயிறன்று நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் அறக்கட்டளை பொருளாளர் திரு.சின்னுசாமி  அமைப்பு செயலாளர் திரு.சரவணன்  அ.க.செயல் உறுப்பினர்கள் திரு.அப்புசாமி,திரு. சின்னுசாமி ஆகியோர் உடனிருந்தனர்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved