🔴 LIVE | முப்பெரும் விழா 2023


குறுக்கு வழியில் குழி பறிக்காதே! மதுரையில் மாபெரும் உண்ணாவிரதம்!

எம்பிசி 20 விழுக்காடு இடஒதுக்கீட்டை மீண்டும் கூறுபோட துடிக்கும் செயலைக்கண்டித்து மதுரையில் நடைபெறும் உண்ணாவிரத்த போராட்டம் குறித்து தொட்டிய நாயக்கர் சமுதாய தலைவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

வன்னியருக்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் 8/2021 சட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும்  நாம் நடத்திய சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றிக்கு மிகப்பெரிய ஆபத்துவர காத்துள்ளது. மாநில அரசு முழுமையான சாதிவாரி கணக்கெடுப்பு  நடத்தி அனைவருக்கும் சமூகநீதி வழங்காமல், மீண்டும் வன்னியர்களுக்கு மட்டும் சாதமாக நடக்க முயற்சிக்கிறது. சட்டவிரோதமான காரியம் என்றபோதிலும் இதர மக்களின் அறியாமையும், அவர்களால் தொடர்ந்து சட்டப் போராட்டங்களை நடத்த பெருமளவு நிதியினை செலவிடமுடியாது என்பதாலும் எப்படியாவது நீதிமன்றங்களின் கண்களில் மண்ணைத்தூவி நமது உரிமைகளை பறித்திட முனைகிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப்பின் அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களின் பேச்சும், செயலும் அதை உறுதிபடுத்துவதாக உள்ளது. எனவே மீண்டுமொரு அத்துமீறல் அரங்கேறும் முன் அதனை தடுப்பது அவசியம். அதற்கு இடஒதுக்கீடு குறித்து எங்களுக்கும் அக்கறையுள்ளது, அதன் அரசியலை அறிவோம் என்பதை அரசுக்கு உணர்த்த வேண்டியது நமது கடமை. வருங்கால சந்ததியினரின் உரிமைகளை காக்க நாங்கள் எந்த தியாகத்திற்கும் தயார் என்பதை நமது கோரிக்கைகளை காதுகொடுத்து கேட்கமறுக்கும் அரசுக்கு உணர்த்திட வருகின்ற (10.04.2022) ஞாயிற்றுக்கிழமை மதுரை, பழங்காநத்தத்தில் தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 115 MBC & 146 BC சமூகங்கள் அங்கம் வகிக்கும் சமூகநீதி கூட்டமைப்பு சார்பாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திதான் இடஒதுக்கீடு செய்யவேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து மாபெரும்  உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நமது தொட்டிய நாயக்கர் சமூகத்தின் சார்பாக விடுதலைக்களம்கட்சி நிறுவனர் தலைவர் கொ.நாகராஜன் உண்ணாவிரதம்  மேற்கொள்கிறார். அவரோடு இணைந்து இக்கோரிக்கைக்கு ஆதரவாக நமது சமூதாய மக்கள் பெருந்திரளாக  கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நாமக்கல் அறக்கட்டளை தலைவர் திரு.மு.பழனிச்சாமி, மேன்மக்கள் அறக்கட்டளைத் தலைவர் திரு.பெ.இராமராஜ், போடி.திரு.சௌந்திரபாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved