🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமூகநீதி காக்க கலைஞர் வகுத்த பாதையில் செல்க! முதல்வருக்கு கோரிக்கை!

வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடர்ப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததைத் தொடர்ந்து, பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில், காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை, வேல்முருகன் ஆகியோர் சட்டமன்றத்தில் பேசினர்.

அதற்கு பதில் அளித்துப்பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழக அரசு மிகச்சிறந்த மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடியதாகவும், தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களின் செயல்பாடுகளை உச்சநீதிமன்றமே பாராட்டியுள்ளதாகவும்,இதுகுறித்து சட்டநிபுணர்களுடன் ஆலோசித்து நிச்சயம் சமூகநீதி நிலைநாட்டப்படும் என்றும் உறுதியளித்தார்.

வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கைகளுக்கு உடனடியாக பதிலளிப்பதும், சந்திப்பதற்கு நேரமும் ஒதுக்கும் தமிழக முதல்வர், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் ஒரு சாதிக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்குவதை எதிராக போராடி வரும் 115 சமுதாய மக்களின் பிரதிநிதிகள் பலமுறை கோரிக்கை வைத்தும் கடந்த ஓராண்டாக சந்திக்க நேரம் ஒதுக்க மறுத்து வருகிறார்.

எனவே ஒருசாதிக்கு இடஒதுக்கீடு வழங்குதற்கு எதிராக ஊருவாகியுள்ள 146 BC/115 MBC/DNT COMMUNITIES JOINT FORUM  FOR SOCIAL JUSTICE - (146 பிசி/115 எம்பிசி/டிஎன்டி சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்களை பட்டியலிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது ,

ஒரு சாதிக்கு இடஒதுக்கீடு கோருவதும், ஒரு சாதிக்கு இடஒதுக்கீடு வழங்குவோம் என்று உத்தரவாதம் தருவதும் அதர்மமானது, திராவிடக்கொள்ளையின் ஆணிவேரை அறுக்கும் செயல் (வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகங்களுக்கு வகுப்புவாரி இடஒதுக்கீட்டின் மூலம் வாய்ப்பு வழங்கிச் சமத்துவ சமூகத்தை உருவாக்குவது என்பதுதான் திராவிடக்கொள்கையின் ஆணிவேர்). பல விளிம்பு நிலைச் சமூகங்களைப் புறக்கணித்துவிட்டு தங்கள் கொள்கையால், மக்கள் தொண்டால் மக்கள் ஆதரவைப் பெறுவதை விட்டுவிட்டு, அநீதியாக 115 சமூகங்களின் உரிமைகளைப் பறித்து ஒரு சாதியைத் திருப்திபடுத்தும் பிற்போக்கான சாதி அரசியல் செய்வது திராவிடக் கொள்கைக்கு எதிரானது. 

முன்னாள் முதல்வர்கள் கலைஞர் மு.கருணாநிதி, அம்மா ஜெயலலிதா ஆகியோர் கட்டிக்காத்துவந்த  சமூகநீதியைச் சிதைப்பதில் முன்னாள் முதல்வர் பழனிச்சாமிக்கும், தற்போதைய முதல்வர் மு,க.ஸ்டாலினுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது தமிழக அரசின் செயல்.  இவ்விவகாரத்தில்அரசு தவறிழைத்துவிட்டது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. திமுக அரசு செய்தது தவறு என்றால் அதைச் செயல்படுத்திய திமுக அரசு செய்ததும் தவறே. ஒரு சாதிக்கு மட்டும் தனி இடஒதுக்கீடு வழங்கவே முடியாது. எங்களின் உரிமைகளை பறிக்க தமிழக அரசு மீண்டும் முயன்றால்115 சமூகங்கள் தங்கள் உரிமைகளைக் காக்க களம் காண்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved