🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இராஜகம்பளத்தாரே! உரிமையை பாதுகாக்க மதுரையில் திரள்வோம்!

வன்னியர் 10.5 இடஒதுக்கீடு வழங்கும் 8/2021 சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றமும் உறுதி செய்து தீர்ப்பளித்தது. இந்திய அளவில் கவனத்தைப்பெற்ற இந்த தீர்ப்பு இடஒதுக்கீடு வரலாற்றில் ஒரு மைல்கல் என்று பார்க்கப்படுகிறது.  இந்த தீர்ப்பை திரித்து உண்மைக்கு மாறான செய்திகளை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பி தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.


MBC பிரிவிலுள்ள தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட பிற 115 சமுதாய மக்களுக்கு இடஒதுக்கீடு குறித்தான புரிதலோ, விழிப்புணர்வோ இல்லாததைப் பயன்படுத்தி மீண்டும் ஒரு மோசடியை அரங்கேற்றத் துடித்து வருகின்றனர்.


ஏற்கனவே சட்டப்போராட்டத்தின் மூலம் நம்முடைய உரிமைகளை நிலைநாட்டிய பொழுதும் அரசியல் பின்புலம், செல்வாக்கு இல்லாத சமூகங்கள் நிறைந்துள்ள 115 சமுதாயங்களின் வாய்ப்பினை தட்டிப்பறிக்க தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.


இதனை தடுக்க வேண்டிய பெரும்பொறுப்பு இடஒதுக்கீட்டால் பலன்பெற்று இன்று லட்சக்கணக்கில் ஊதியமாகப்பெறும் பலருக்கு இருந்தாலும், இப்பிரச்சினையில் அவர்களின் பாராமுகம் எதிரிகளுக்கு துணிச்சலை கொடுத்துள்ளது.இடஒதுக்கீடால் பலன் பெறும்  சாதி இளைஞர்களுக்கு அக்கறையில்லாமல் இருந்தாலும் வருங்கால தலைமுறையினரின் நன்மைகருதி பல்வேறு இடையூறுகளுக்கும் மத்தியில் போராடியவர்களே தொடர்ந்து இப்போராட்டத்தையும் முன்னெடுத்து வருகின்றனர்.


நாளை காலை 10 மணியளவில் மதுரை பழங்காநத்தத்தில் நடைபெறும் இப்போராட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பாக விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். அவரோடு இணைந்து நாமக்கல் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, மேன்மக்கள் அறக்கட்டளை தலைவர் பெ.ராமராஜ், போடி.சௌந்திரபாண்டியன், திருப்பூர்.ராமசாமி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் கண்ணன், அழகர்சாமி, மற்றும் சுந்தர் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved