🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சமூகநீதி பாடம்! - சமூகநீதி கூட்டமைப்பு அழைப்பு

தமிழக அரசு வன்னியர் சாதிக்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் 8/2021 -ஐ உயர்நீதிமன்றம் கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி ரத்து செய்தது தீர்ப்பளித்தது. அதனை எதிர்த்து தமிழக அரசும் பாட்டாளி மக்கள் கட்சியும் செய்த மேல்முறையீட்டு மனுக்களை கடந்த மார்ச் 31-ஆம் தேதி உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காத வன்னியர் "லாபி" மீண்டும் வன்னியர் இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு தொடர் அழுத்தம் கொடுத்து வருகிறது. வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருசில அரசு அதிகாரிகள், வழக்கறிஞர்கள், முன்னாள் நீதிபதிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி ஒரே அணியில் திரண்டு இப்பணியில் ஈடுபட்டுவருவதாக நம்பப்படுகிறது.

இதன் எதிரொலியாக தமிழக முதல்வர் நேற்று சட்ட வல்லுனர்கள், அரசு அதிகாரிகள், அமைச்சர்களோடு ஆலோசனை நடத்தியுள்ளார். இதன் மூலம் சமூகநீதி பேசும் தமிழக அரசும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் ஒரு சாதிக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்க துணைபோகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

எந்தக்கட்சியாக இருந்தாலும் வன்னியர் சாதியினர் மட்டும் தங்கள் சாதிக்காக குரல் எழுப்பி வரும் நிலையில் இதரசாதி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சுகபோகங்களை கணக்கில் கொண்டு பேசாமடைந்தைகளாக, கட்சியின் கட்டளைக்கு கட்டுப்பட்டு சமுதாயத்திற்கு துரோகம் இழைத்து வருகின்றனர். இதனால் வெகுண்டெழுந்துள்ள சமுதாய மக்கள் தங்கள் சமுதாய சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி பிரதிநிதிகளை முற்றுகையிடுவது குறித்து ஆலோசித்து வருகின்றனர். முதற்கட்டமாக வரும் 21.04.2022 அன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடஒதுக்கீட்டில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து விளக்குவதற்கான கூட்டத்தை சென்னையில் நடத்தவுள்ளனர். அதற்கான அழைப்பிதழை சமூகநீதி கூட்டமைப்பினர் சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து அழைப்பு விடுத்து வருகின்றனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved