🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஏப்'22-இல் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம்!

உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் நிராகரித்த வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்தை, உச்சநீதிமன்றத்தீர்ப்புக்கு மாறாக மீண்டும் அவசர சட்டத்தை தமிழக அரசு முயல்வதாக பரவலான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்று தமிழக முதல்வர் அமைச்சர்கள், துறை செயலாளர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரோடு இது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார். 115 சமூகங்களை கடந்த ஓராண்டாக சந்திக்க மறுக்கும் தமிழக முதல்வர் ஒரு சாதிக்கு ஆதரவான நிலையை எடுத்துள்ளது மற்ற சமுதாயத்தினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

115 சமூகங்கள் மீது பாரமுகம் காட்டும் அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் சட்டமன்ற கூட்டத்தொடரில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் மானியக் கோரிக்கை நாளான ஏப்ரல்'22-இல் தலைமைச்செயலக முற்றுகைப்போராட்டம் நடைபெறும் என சமூக நீதி கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இக்கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள தொட்டிய நாயக்கர் சமூகத்தின் சார்பில் வருங்கால தலைமுறைகளின் எதிர்கால கல்வி, வேலைவாய்ப்பு உரிமயை பாதுகாத்திட தமிழகம் முழுவதிலிமிருந்து பெருமளவு இளைஞர்கள் கலந்துகொள்ள வேண்டுமென தொட்டிய நாயக்கர் சமுதாய இடஒதுக்கீடு மீட்புக்குழு வேண்டுகோள் வைத்துள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved