🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பிஜேபி தலைவர் அண்ணாமலையுடன் சந்திப்பு!

வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக இன்று மதியம் தொட்டிய நாயக்கர்  உள்ளிட்ட 261 சாதிகள் அங்கம் வகிக்கும் சமூகநீதி கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் சென்னை கமலாலயத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களை சந்தித்துப் பேசினர்.

சுமார் அரை மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் வன்னிய இடஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, உயர்நீதிமன்ற தீர்ப்பில் எழுப்பிய ஏழு கேள்விகளுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பில் சொல்லியுள்ள விடயங்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியதின் அவசியம், அதற்கு பாஜக சட்டமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது. அனைத்து விசயங்களையும் ஆர்வமுடன் கேட்டுக்கொண்ட பாஜக மாநிலத் தலைவர் இதுகுறித்து கட்சித் தலைமையுடன் விவாதித்து அறிப்பதாக தெரிவித்தார்.

இன்று நடந்த சந்திப்பின்பொழுது தொட்டிய நாயக்கர் சமுதாய இடஒதுக்கீடு மீட்புக்குழு சார்பாக பெ.இராமராஜ் அவர்கள் கலந்துகொண்டு கோரிக்கை மனு அளித்தார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved