🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வாய்திறந்து பேசுங்க ராசா....பேசுங்க....

வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பில் ரத்து செய்ததைத் தொடர்ந்து,  மீண்டும் வன்னியர் இடஒதுக்கீடு சிறப்பு சட்டத்தை கொண்டுவரக்கோரி தமிழக அரசுக்கு பலவகைகளில் அழுத்தத்தை பல்வேற் தளங்களில் இருந்து கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக மிகப்பெரிய அரசியல் லாபி கடந்த இரு வரங்களாக நடைபெற்று வருகிறது.

இதற்கு எதிராக வன்னியர் அல்லாத தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 115 MBC, 146 BC சமுகங்களின் சமூகநீதி கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் கடந்த இரு தினங்களாக சென்னையில் முகாமிட்டு பல்வேறு கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

 இதன் தொடர்ச்சியாக இன்று காலை சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த சமூகநீதி கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ரத்தினசபாபதி அவர்கள், தமிழக சட்டமன்றத்தில் வன்னியர் சமுதாய சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் சமுதாயத்திற்காக  குரல் கொடுக்கும் போது, இதர 261 சமுதாயங்களை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் சமுதாய இடஒதுக்கீட்டிற்காக குரல் கொடுப்பது இல்லை என்று குற்றம் சாட்டினார்.

இதர சமூகங்களின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடஒதுக்கீடு குறித்த போதிய விழிப்புணர்வு, புரிதல் இல்லாத கரணத்தால் சமூகநீதி கூட்டமைப்பின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடஒதுக்கீடு குறித்தான விளக்கக்கூட்டத்தை இன்று மாலை சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளாதாக தெரிவித்தார். 

இதற்கான அழைப்பிதழை அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சமூகநீதி கூட்டமைப்பின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved