🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மழைக்கு இசையமைத்த இசைமாமேதையின் நினைவுநாள் இன்று!

காடல்குடி ஜமீன்தாரரும், இசைமகா சமுதிரம் என்று அழைக்கப்படும் ஸ்ரீலஸ்ரீ நல்லப்பசுவாமிகளுன் 57-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்ப்படுகிறது. 1889-ஆம் ஆண்டில் அவதரித்து 1965 -இல் இப்பூவுலகை விட்டு மறையும் வரை 76 ஆண்டுகள் வாழ்ந்து இசைத்துறையில் பல அதிசியங்களை நடத்தியவர் இசைமகா சமுத்திரம்.

மிகவும் எளிமையான தோற்றமும், வாழ்வையும் கொண்டிருந்தவரான சுவாமிகள், இசைத்துறையின் ஜாம்பவாங்களுக்கு ஆசானாகவும், அவர்களுக்கு ஆச்சரியமாகவும் இருந்த மாமனிதர்.

செவிகளுக்கு இசையை மட்டும் அளித்தவரல்ல. தன்னைத்தேடி வருபவர்களுக்கு முதலில் வயிறார உணவளித்த மனித புனிதர் ஸ்ரீலஸ்ரீ நல்லப்பசுவாமிகள். சுவாமிகளின் குரல் மட்டும் கம்பீரமல்ல, மொத்த வாழ்க்கையும் அப்படியே. மைசூர் சமஸ்தான மன்னர் சுவாமிகளின் இசைகேட்க விரும்பியபொழுது, மானரின் விருப்பத்தை தன் இசை மட்டுமே பூர்த்திசெய்யும், தன் தலை ஒருபோதும் மன்னருக்கு தலைவணங்காது என்று முன்னரே அறிவித்த துணிச்சல்காரர் இசை மாமேதை. 

கம்பளத்தார் குலத்தில் பிறந்த அதிசியம் காடல்குடி பாளையக்காரர் நல்லப்பசுவாமிகளின் நினைவு நாளில் அவரை போற்றி வணங்குவோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved