🔴 LIVE | முப்பெரும் விழா 2023


குரூப்-4 தேர்வில் வன்னியர் இடஒதுக்கீடா?அரசு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.

வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு சிறப்பு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2021 நவம்பர் ஒன்றாம் தேதி வழங்கிய தீர்ப்பில் ரத்தி செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசும் பாமக வும்  செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 2022 மார்ச் 31-ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் உயர்நீதிமன்ற உத்தரவு செல்லும் என்று கூறி மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப் பின்னர் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் குரூப் 4 பணியிடங்களுக்காண தேர்வுகளை வெளியிட்டது. அதன்படி இம்மாத இறுதிவரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குரூப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் TNPSC இணையத்தில் ஆன்லைனிலேயே விண்ணப்பிக்க ஏற்பாடுகளை செய்துள்ளது.

விண்ணப்பத்தில் இடஒதுக்கீட்டிற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களை வகைப்படுத்தும் இடஒதுக்கீடு பிரிவில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் மூன்று விதமாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவில் MBC பொது பிரிவும், இரண்டாம் பிரிவில் MBC என்று பொதுப்பெயரில் வன்னியர் சாதிக்கு மட்டும் தனியாகவும், மூன்றாவதாக MBC&DC என்றும் உள்ளது.

இது உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக உள்ளது. உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவை மூன்றாக பிரிப்பது செல்லாது என்று தெளிவாக தீர்ப்பு வழங்கிய பின்னரும் தேர்வாணையத்தின் இணையதளத்தில் மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளது நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது. இதனைச் சுட்டிக்காட்டியுள்ள சமூகநீதி கூட்டமைப்பு தமிழக அரசின் தலைமைச் செயலாளர், தேர்வாணைய தலைவர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதாக சம்மந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஏற்கனவே வன்னியர் இடஒதுக்கீடு சட்டத்தை திரும்ப கொண்டுவர வேண்டுமென்று தமிழக அரசுக்கு பல்வேறு வகையில் அழுத்தம் இருந்து வரும் நிலையில், தேர்வாணையத்தின் இதுபோன்ற செயல் மீண்டும் வன்னியர் இடஒதுக்கீடு சட்டத்தை அரங்கேற்ற சதிவேலை நடக்கிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved