🔴 LIVE | முப்பெரும் விழா 2023


முதல்முறையாக முதல்வருடன் சந்திப்பு!

தமிழகத்தில் DNT சான்றிதழ்கோரி 2014 முதல் போராட்டங்கள் நடந்து வருகிறது. ஐந்தாண்டு போராட்டத்திற்குப் பிறகு 2019 பாராளுமன்ற தேர்தலின்பொழுது மட்டுமே ஆட்சியாளர்கள் செவிசாய்த்து DNC/DNT என இரட்டைச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இரட்டைச் சான்றிதழ் கோரிக்கையாகவே இல்லாதபொழுது தேர்தல் ஆதாயத்திற்காக அவசர அவசரமாக வழங்கப்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தலின்பொழுது இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது அனைவரும் அறிந்ததே.

2021 சட்டமன்ற தேர்தலில் தென்மாவட்டங்களில் ஆளும்கட்சிக்கு கடுமை பாதிப்பை ஏற்படுத்திய இப்பிரச்சினையை புரிந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆலங்குளம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது திமுக ஆட்சி அமைந்தவுடன் DNT சான்றிதழ் வழங்கப்படும் என அறிவித்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தவுடன் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று நம்பியிருந்த வேலையில் அரசு தரப்பிலிருந்து எந்தவிதமான சாதகமான பதிலும் வரவில்லை.

முதல்வரை சந்திக்க கடந்த ஓராண்டாக சீர்மரபினர் நலசங்கம் சார்பில் எடுக்கப்பட்ட எந்த முயற்சியும் பலன் அளிக்காததால், நேற்று திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் நடைபெற்றது. இதனையடுத்து முதல்வர் அரசு விழாவிற்காக இன்று தேனி வரவிருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து சீர்மரபினர் நலசங்கத்தினரை அழைத்துப்பேசிய ஆளும்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக கூறினர். 

அதன்படி இன்று தேனி வருகை தந்த தமிழக முதல்வர் தங்கியிருந்த இடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட சீர்மரபினர் நலசங்க நிர்வாகிகள் முதல்வரை சந்தித்து DNT ஒற்றைச்சான்றிதழ், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி மனு அளித்தனர். இதன் மூலம் ஓராண்டுகால முயற்சி இன்று சாத்தியமாகியுள்ளது.  

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved