🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பாஞ்சை சித்திரை திருவிழாவில் துரை வைகோ!

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் குலதெய்வமாகவும், கம்பளத்தார்களின் இஷ்டதெய்வமாகவும், இனத்தின் அடையாளமாகவும் விளங்கும் பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு.வீரசக்கதேவி கோவில் சித்திரைத் திருவிழா வரும் 13-ஆம் தேதி கோலாகலமாக துவங்குகிறது. இவ்விழாவில் பங்கேற்க பல்வேறு கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

இதனொருபகுதியாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைநிலையச் செயலாளர் துரை வைகோ அவர்களை சந்தித்து வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை சார்பில் அழைப்பிதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு பாஞ்சை செல்லவிருப்பதாக துரைவைகோ அவர்கள் அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில் துரைவைகோ குறியிருப்பதாவது,

வருகின்ற 13.05.2022 அன்று வீரம் விளைகின்ற தீரர்கள் கோட்டமாம் பாஞ்சாலங்குறிச்சியில் நடைபெறவிருக்கும் 

அருள்மிகு.வீரசக்கதேவி ஆலய சித்திரை பெருந்திருவிழாவினை முன்னிட்டு, கோவில்பட்டி மாநகரத்திலிருந்து தொடங்குகின்ற வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தொடா் ஜோதியை, பாஞ்சை பெருவேந்தரின் புகழ் பாடிடும் வகையில் ஒவ்வோராண்டும் இவ் விழாவில் தவறாது கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்து கொண்டுள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் இயக்கத் தந்தை, தலைவர்.வைகோ M.P. அவர்களின் மேல் என்றும் மாறா பற்று கொண்டுள்ள "மாமன்னர் திருமலை நாயக்கர் இளைஞர் பேரவை", "வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை"களின் சார்பாக அமைப்புகளின் நிர்வாகிகள், எழுச்சிமிகு இளைஞர்கள் என ஏராளமானோர் இன்றைய தினம் என்னை சந்தித்து, வருகின்ற வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தொடர் ஜோதி பெருவிழாவில் கலந்துகொண்டு நினைவு ஜோதியினை பெற்றுக் கொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டும் என்று கூறி அழைப்பிதழை வழங்கினார்கள்.

விழாவில் உறுதியாக கலந்து கொள்வோம் என்று கூறி இளைஞர்களுடன் புகைப்படங்கள் எடுத்தும், அவர்களது குடும்பச்சூழல், பணிகள் பற்றி அளவளாவி மகிழ்ந்தேன்.

அன்புடன்

துரை வைகோ

தலைமை கழக செயலாளர்

மறுமலர்ச்சி திமுக

21.04.2022.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved