🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மாவட்டந்தோறும் சமூக தன்னார்வலர்கள் நியமனம்!

ஒவ்வொரு பாத்தாண்டுகளுக்குமொருமுறை இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனையடுத்து 2021-இல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்திருக்க வேண்டும். ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதிவாக்கில் மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி தொடங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி மக்கள்தொகை கணக்கெடுக்கப்படும்பொழுது பட்டியலினத்தவர்(SC), பழங்குடிகள் (ST), முஸ்லீம், கிருஸ்தவர்கள் உள்ளிட்ட மத சிறுபான்மையினர் எண்ணிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி அவர்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம்,கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் நாட்டில் 60 விழுக்காட்டிற்கும் அதிகம் இருக்கும் இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர் குறித்த புள்ளி விபரங்கள் மட்டும் சேகரிக்கப்படுவதில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்தாலும் எந்த அரசும் காதில் போட்டுக்கொள்வதில்லை.

இதனால் நாட்டில் 65 சதவீதமாகவுள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின்  கலவி, வேலைவாய்ப்பு உரிமைகள் கபளீகரம் செய்யப்பட்டு, ஒருசில சமுதாயங்களே அனைத்து துறையிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் உயர்குடி மக்களுக்காக உழைக்கும் அடிமை வர்க்கங்களாக சுரண்டப்பட்டு வருகின்றனர். நமது அரசியல் சாசனம் நாட்டில் இருக்கும் வளங்களையும், அதிகாரங்களையும் அனைவருக்கும் பகிர்ந்தளிப்பதை உறுதி செய்கிறது. ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்களின் அறியாமை காரணமாக அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகள் குறித்த விழிப்புணர்வின்றி காலம்காலமாக முன்னேற்றமின்றி சுரண்டப்படும் வர்க்கமாக இருந்து வருகின்றனர்.

எனவே இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் சாதிவாரி கண்க்கெடுப்பையும் நடத்த வேண்டும், மக்கள் தொகைக்கேற்ப ஓபிசி இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும், தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி 115 எம்பிசி, 146 பிசி சமூகங்கள் இணைந்த சமூகநீதி கூட்டமைப்பின் சார்பாக ஆகஸ்டு 7-ஆம் தேதி மதுரையில் மாபெரும் சமூகநீதி மாநாடு நடைபெறவுள்ளது.

நாடெங்கும் சமூகநீதிகுறித்த விழிப்புணர்வு அதிகமாகி வரும் நிலையில், இந்திய அரசியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லக்கூடிய சித்தாந்தமாக சமூகநீதி இருக்கப்போகிறது. அடுத்த தலைமுறை தலைவர்கள் சமூகநீதி சித்தாந்தத்திலிருந்து தான் உருவாக இருக்கிறார்கள். எனவே அரசியலில் ஆர்வமுள்ள இளம் தலைமுறையினர்களுக்கு மிகப்பெரிய களத்தை உருவாக்கித்தரும் என்பது உறுதி. பல்வேறு சமூகங்கள் இணைந்து முன்னெடுக்கும் இம்மாநாட்டில் தொட்டிய நாயக்கர் சமூகமும் பங்கேற்கவுள்ளது. எனவே அரசியலிலும், சமூக சேவையிலும் ஆர்வமுள்ள இளைஞர்களை மாவட்டம் தோறும் அடையாளம் கண்டு, வருங்கால அரசியல் தலைவர்களை உருக்கிட சமூகநீதி கூட்டமைப்பில் இணைந்து பணியாற்றிவரும் தொட்டியநாயக்கர் சமுதாய அமைப்புகள் முடிவு செய்துள்ளன. ஆர்வமுள்ள அரசியல் பிரமுகர்கள், இளைஞர்கள், தனித்தோ, குழுவாகவோ பணியாற்ற முன்வந்தால், அவர்களை முன்னிறுத்தி சமூகநீதி பெரும்பயணத்தை தொடங்கலாம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved