🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமுதாயத்திற்கு தோள்கொடுப்போம்! நல்ல சமூகத்தை வளர்த்தெடுப்போம்!

தமிழகத்தில் தனியொரு சாதிக்கு 10.5 விழுக்காடு வழங்கப்பட்டதை எதிர்த்து 115 மிகவும் பிற்படுத்தப்பட்ட, 146 மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் இணைந்து  "சமூகநீதி கூட்டமைப்பு" என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது. இது கட்சி சார்பற்ற அமைப்பாக, உரிமைகள் பறிக்கப்பட்ட, இன்னும் அதிகார வாடையே படாத சமூகங்களுக்கான அரசியல், கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகம் மட்டுமல்லாது தேசிய அளிவில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் குரல் கொடுத்து வருகிறது.

சமூகநீதி கூட்டமைப்பு சார்பாக வன்னியர் இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றிவாகை சூடியுள்ளது. தொட்டிய நாயக்கர்கள் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட சாதிகளை உள்ளடக்கிய இந்த அமைப்பின் சார்பாக இளைஞர்களுக்கு இந்திய அரசியல் சாசன சட்டம், இடஒதுக்கீடு உரிமை, அரசியல், பொதுநல சேவை, அரசு அலுவலகம், அரசு நிர்வாக கட்டமைப்புகளை அணுகுவது, நிதிநிலை அறிக்கை குறித்தான விழிப்புணர்வு போன்ற பயிற்சிகளை இணையதள வழியாக நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர அகிம்சா வழியில் போராட்டங்கள், அரசு அடக்குமுறைகளை சட்டத்தின் உதவியோடு எதிர்கொள்வது போன்ற ஒரு சிறந்த அரசியல்வாதியை வார்த்தெடுத்து சமூகத்திற்கு  வழங்குவதற்குண்டான அனைத்து பணிகளையும் செய்து வருகிறது.

அகில இந்திய அளவில் சமூக உரிமைகளுக்காக போராடிக்கொண்டிருக்கும் பிரபலமான தலைவர்கள், பல்வேறு அமைப்பு, கட்சிகளின் தலைவர்கள், சட்டமேதைகள், பல்துறை அறிஞர்களைக்கொண்டு கருத்தரங்கங்களையும் நடத்தி வருகிறது. தொலைக்காட்சி விவாதங்கள், யூடியூப் சேனல்கள் ஆகியவற்றில் விவாதமேடை பிரபலமாகிவரும் இந்தவேளையில் சமூகநீதி கூட்டமைப்பில் வார்ப்பிக்கப்பட்ட பலர் இன்று விவாதங்களில் பங்கேற்று வருகின்றனர். 

நீண்டகால தொலைநோக்குத்திட்டத்தோடு பணிகளை முன்னெடுத்து வரும் சமூகநீதி கூட்டமைப்பின் சார்பில் , சாதிவாரி கணக்கெடுப்பு, தனியார்துறையில் இடஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்thi, மதுரை மாநகரில் ஆகஸ்டு 07 ஆம்தேதியன்று மாபெரும் சமூகநீதி மாநாடு நடைபெறவுள்ளது. 

பொதுவாழ்வில் குறிப்பாக அரசியலில் பங்கேற்க விருபமுள்ளவர்களுக்கும், அர்சியலில் முழுநேரமாக ஈடுபட்டாலும் சாதி பெரும்பான்மை இல்லாத காரணத்தால் போதிய வாய்ப்பு கிட்டாதவர்களும் சமூகநீதி கூட்டமைப்பில் இணைந்து பயணிப்பதின் மூலம் 260 சாதிகளின் நட்போடு தங்களை வளர்த்தெடுத்துக்கொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதனால் பல சமுதாய இளைஞர்கள் அரசியல் கட்சிகளில் சேரும்முன் பொதுவாழ்க்கைக்கு முன்னோட்டமாக சமூகநீதி கூட்டமைப்பை பயன்படுத்திக்கொள்ள விரும்பி, தன்னெழுச்சியாக இணைந்து வருகின்றனர்.

அரசியலில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினருக்கும் இது மிகப்பெரிய வாய்ப்பாக உருவாகியுள்ளது. அரசியல் கட்சியை தவிர்த்து அனைத்து சமூகங்களோடும் இணைந்து பயணிக்கும் அமைப்பாக சமூகநீதி கூட்டமைப்பு உள்ளது. இதில் இணைவதின் மூலம் தங்கள் சமூகத்திற்கும் பணியாற்றியதுபோல் இருக்கும், தங்கள் எதிர்கால அரசியலுக்கு பயிர்சிக்களமாகவும்  இருக்கும் என்ற எண்ணம் இளைஞர்களிடம் மேலோங்கி வருகிறது.

இதன் வெளிப்பாடாக, தொட்டிய நாயக்கர் சமுதாயத்தில் பிறந்து வெளிநாடுகளில் பணியாற்றி சொந்த ஊர் திரும்பியுள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த அமிர்தராஜ் அவர்கள் சமுதாயப்பணியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பவர். அரசியல் கட்சிகளில் இணைவதில் விருப்பமில்லாதவர் ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருந்தார். தற்பொழுது சமூகநீதி கூட்டமைப்பில் இணைந்துள்ள ஆனந்தராஜ், அமிர்தராஜ் சகோதரர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் சமுதாய ஆர்வமுள்ள இளைஞர்களை ஒருங்கிணைத்து இடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாக்க முன்வந்துள்ளனர்.

வெளிநாடு சென்று திரும்பினாலும் சமுதாயத்தின் மீது மிக அக்கறைகொண்டு, ஏற்கனவே சமூகநீதி கூட்டமைப்பில் பயணிக்கும் தொட்டிய நாயக்கர் சமுதாய அமைப்புகளொடு இணைந்து சமுதாய முன்னேற்றத்திற்கு பாடுபட முன்வந்துள்ள அமிர்தராஜ் சகோதரர்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். இதுபோன்று அனைத்து மாவட்டங்களிலும் உள்ள இளைஞர்கள் தயக்கமின்றி, தாழ்வுமனப்பான்மையை விட்டொழித்து பணியாற்ற வருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புக்கு: 7395988767, 9976064000,9842181004,8695215032


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved