🔴 LIVE | முப்பெரும் விழா 2023


புதியபாதை காட்டும் நாமக்கல் கம்பளத்தார்கள்!

40 லட்சம் மக்கள்தொகை கொண்ட இராஜகம்பளத்து தொட்டிய நாயக்கர் சமூகத்திற்கு அரசியல் கட்சிகள் உரிய அங்கீகரம் வழங்குவதில்லை என்ற அதிருப்தி பல ஆண்டுகால இளைஞர்கள் மத்தியில் நிலவி வருகிறது.  மாநில கட்சிகள் முதல் தேசிய கட்சிகள் வரை கிளைக்கழக அளவில் பொறுப்புகளை வழங்கி கூட்டம் சேர்க்க வைத்துக்கொள்கிறார்களே தவிர தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகளையோ, சமுதாயத்திற்கான திட்டங்களையோ வழங்குவதில்லை. கம்பளத்தார் தவிர இங்கு வேறு வேட்பாளர்களே நிறுத்தமுடியாது என்ற இடத்தில் மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்படுகிறதே தவிர, கட்சியில் சீனியாரிட்டி, தகுதி, தியாகம் தகுதி அடிப்படையில் வழங்குவதில்லை. நம்முடைய அரசியல் தலைவர்களும் சொந்த சாதி மக்கள் அதிகமுள்ள ஊராட்சிகளில் போட்டியிட முண்டியடிக்கின்றனறே தவிர அரசியல் வாய்ப்பில்லாத பல்வேறு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளை இணைத்து வெற்றி பெறுவதற்கான எந்த முன்னெடுப்புகளையும் செய்ததாக இல்லை.

வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தைத் தொடர்ந்து பிற சமுதாயங்களோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இயற்கையாக அமைந்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் வன்னியருக்கு 10.5 விழுக்காடு தனி இடஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து அதிமுக வை வீழ்த்த முடிவு செய்தபொழுது, கொங்கு மாவட்டத்தில் 95 சதவீத வெற்றி பெற்ற அதிமுக, நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் படுதோல்வி அடைந்தது. இதற்கு மிக முக்கிய காரணம் வன்னியர் இடஒதுக்கீட்டை எதிர்த்து போராடி வந்த தொட்டிய நாயக்கர், வேட்டுவக்கவுண்டர் சமுதாயங்கள் இணைந்து தீவிர பிரச்சாரம் செய்ததே என்பதை ஆளும் கட்சி மாவட்டச் செயலாளரே ஒப்புக்கொண்ட உண்மை. இதை சாதித்துக்காட்டிய பெருமை நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளையையே சாரூம். கடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலிலும் தொடர்ந்த இக்கூட்டணி ஆளும்கட்சியையே தோல்வியுறச்செய்து சுயோட்சையாக போட்டியிட்ட வேட்டுவக்கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவரை  வெற்றிபெறச் செய்தனர்.

தற்பொழுது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, தனியார்துறையிலும் இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்டு 7-ல் மதுரையில் சமூகநீதி மாநாடடு நடைபெறுவதைத் தொடர்ந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களிடையே கூட்டணி தொடர்கிறது. மாநாடு குறித்து ஆலோசிப்பதற்காக தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை ஏற்பாட்டில் நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற ஆலோசனையில் 1.குரும்ப கவுண்டர் சமூகம் 2.முத்தரையர் சமூகம் 3.போயர்சமூகம் சமூகம் 4.கொங்கு வேளாளர் சமூகம் 5.ஜங்கம் சமூகம் 6.ஆண்டிபண்டாரம்சமூகம் 7.நாவிதர்சமூகம் 8.வண்ணார் சமூக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் இன்று தேனி மாவட்டத்தில் தொட்டிய நாயக்கர், கள்ளர், மறவர், அம்பலக்காரர், வண்ணார், நாவிதர், ஆண்டிப்பண்டாரம் உள்ளிட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தவுள்ளனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved