🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பாஞ்சையில் கண்ட எழுச்சி எல்லா அரங்கிலும் எதிரொலிக்கட்டும்!

வீரசக்கதேவி ஆலயத்தில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவின் முதல்நாளான நேற்று பாஞ்சாலங்குறிச்சி சென்று அம்மனை தரிசித்து, வந்திருந்த உறவுகளுடன் அளவலாவிய அனுவபம் குறித்து விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் பகிர்ந்துள்ளதாவது.

இந்திய விடுதலைக்கு முதல்முழக்கமிட்ட பாஞ்சாலங்குறிச்சி மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் குல தெய்வமான வீரசக்கதேவி ஆலய 66-வது ஆண்டு சித்திரை திருவிழா நேற்று (மே13) தொடங்கி இன்று (மே 14) இரவு  வரை பாஞ்சாலங்குறிச்சியில் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மே 13ம் தேதி நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற சித்திரை திருவிழாவில், விடுதலைக்களம் கட்சி நிறுவனத்தலைவரான கொ.நாகராஜன் ஆகிய நானும் கலந்து கொள்ளும் நல்வாய்ப்பு கிட்டியது. விழாவில் கலந்து கொள்வதாற்காக நேற்று அதிகாலை இராசிபுரத்திலிருந்து புறப்பட்டு, பாஞ்சாலங்குறிச்சியை சென்றடைந்து அன்னையை வழிபட்டு,அவளருள் பெற்று பெருமகிழ்வு கொண்டேன்.


தமிழகத்தில்  பல்வேறு பகுதிகளில் இருந்து நமது இராஜ கம்பள தொட்டிய நாயக்கர் சமுதாய இளைஞர்களால் கொண்டு வரப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு ஜோதியானது மிகுந்த எழுச்சி ஆரவாரத்தோடு, மிகவும் கண்ணிய கட்டுப்பாட்டுகளுடன் பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்து சேர்ந்தது மிகவும் பெருமிதமாக இருந்தது.


அதே போல், விழாவில் பங்கெடுத்த என்னோடு, அங்கு நமது உறவுகள் குடும்பமாகவும், இளைஞர் பட்டாளத்துடனும், தனித்தனியாகவும் என்னோடு சேர்ந்து செல்பி உள்ளிட்ட புகைப்படங்கள் எடுத்த அந்த அன்பு கொண்ட தருணத்தை வார்த்தைகளில் விவரித்திட முடியாத மகிழ்ச்சியை தந்தது.


மேலும், விழாவிற்கு சிறப்பான பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் விழாவிற்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்த பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக்குழுவிற்கும் இந்நேரத்தில் பெரும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய சித்திரை திருவிழாவிற்கு உணர்வோடும், பேரெழுச்சியோடும் கூடும் லட்சணக்கான நம் இராஜ கம்பள தொட்டிய நாயக்கர் சமுதாய இன மக்கள், எதிர் வரும் நாட்களில், நமது சமூக வளர்ச்சிக்கான கல்வி,வேலைவாய்ப்பு, சமூக நீதி உள்ளிட்டவற்றில் இடஒதுக்கீடு பெறும் உரிமை போராட்டம் போன்றவற்றிலும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென்பதே விருப்பம். இளைய சமுதாயம் முன்வருவார்கள் என்று நம்புகிறேன். 

இவண் :

கொ.நாகராஜன்

நிறுவனத் தலைவர்

விடுதலைக்களம் கட்சி

தலைமையகம், ராசிபுரம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved