🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பாஜக ஒன்றிய தலைவராக கம்பளத்தார் நியமனம்!

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு புதிய நிர்வாகிகள் நியமனம் நடைபெற்று வருகிறது. அகில இந்திய கட்சியான பாஜகவில் விவசாயம், கலை, ஓபிசி, வர்த்தகம் என பல பிரிவுகள் உள்ளன. இதில் ஒவ்வொன்றிலும் தலைவராக ஒருவரும்,  பொதுச்செயலாளர், செயலாளர், துணைச்செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு நான்கு முதல் 12 பேர் வரை நியமிக்கப்படுகின்றனர். இதன் நோக்கம் சமூகத்திலுள்ள அனைத்து சாதியினருக்கும் அரசியல் பிரதிநிதித்துவம் அளிப்பதும் அரசியல் மயப்படுத்துவதும் என்று விளக்கமளிக்கின்றனர் பிஜேபி தலைவர்கள். 

அந்தவகையில் திராவிடக்கட்சிகளில் பெரும்பான்மை சாதியினரே அனைத்து அதிகாரங்களையும், பதிவிகளையும் அனுபவிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. 

இதற்குமாறாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டு வரும் பிஜேபி நிர்வாகிகள் பட்டியலில் எல்லா சாதியினருக்கும் பிரதிநிதித்துவம் அளித்துள்ளனர். தொட்டிய நாயக்கர் சமூகத்தை பொறுத்தவரை சில தினங்களுக்கு முன் விவசாய அணியின் மாநிலச்செயலாளராக இராஜேஷ் குருசாமி நியமிக்கப்பட்டிருந்தார். 

இதன்தொடர்ச்சியாக தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஒன்றிய பிஜேபி தலைவராக சுப்பிரமணியபுரம் ஊராட்சி மன்றத்தலைவரும் வழக்கறிஞருமான K.இராம்குமார் M.A.B.L., நியமிக்கப்பட்டுள்ளார். 

ஒன்றிய தலைவராக கம்பளத்தாருக்கு வாய்ப்பு வழங்கிய மாநில தலைவர் அண்ணமலை அவர்களுக்கும், பிஜேபி முன்னனி தலைவர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved