🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கலைஞர் பிறந்தநாளில் கம்பளத்து தலைவர்கள்!

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99 வது பிறந்தநாள் விழா இன்று  வழக்கமான உற்சாகத்தோடு திமுக வினரால் கொண்டாடப்பட்டது. திமுகவில் கட்சி மற்றும் உள்ளாட்சிகளில் பொறுப்பு வகிக்கும் கம்பளத்து தலைவர்களும் கலைஞர் பிறந்தநாளை சிறப்புடன் கொண்டாடினர்.


அந்தவகையில், தூத்துக்குடி மாவட்டம், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகிக்கும் M. செல்வராஜ் அவர்கள் வெளியிடுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு  கழகத்தலைவர் தமிழக முதல்வர் தளபதியார் ஆணையின்படியும், பாராளுமன்ற உறுப்பினரும் மாநில மகளிர் அணிச்செயலாளருமான திருமதி கவிஞர் கனிமொழி கருணாநிதி M.P அவர்களின் வழிகாட்டுதல் படியும், சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் மாண்புமிகு P.கீதாஜீவன் அவர்களின் உத்தரவுப்படியும், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு மார்கண்டேயன் அவர்களின் ஆலோசனைப்படியும், புதூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிளைக்கழகங்கள் மற்றும் புதூர் பேருந்து நிலையம் முன்பும் கழக கொடியை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஏற்றிவைத்து மக்களுக்கு நலத்திட்ட. உதவிகள் வழங்குகினார். பின்பு தேனம்மாள் முதியோர் இல்லத்தில் இன்றைய  மதிய உணவிற்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டு உணவு பரிமாறினார். இறுதியாக காடல்குடி கிளைக்கழகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியை கொடி ஏற்றி துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்தாண்டு கலைஞர் பிறந்த நாள் விழா மிகுந்த எழுச்சியோடு சிறப்புடன் கொண்டாடப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். 


இதேபோல் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலை இலக்கிய அணியின் மாவட்ட அமைப்பாளர் வை.மலைராஜன், கோவை மாவட்டம் சந்தேகவுண்டன்பாளையம் கிளை சார்பில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ் ஆகியோர் அந்தந்த பகுதியில் கழக கொடியினை ஏற்றி, இனிப்பு வழங்கி கலைஞர் பிறந்தநாளை கொண்டாடியதாக தெரியவந்துள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved