🔴 LIVE | முப்பெரும் விழா 2023


திமுக ஒன்றியக் கழக தேர்தலில் போட்டியிடும் கம்பளத்தார்கள்!

திமுக-வின் 15-வது பொதுத்தேர்தலை நடத்த தலைமைக்கழகம் கடந்த ஏப்ரல் 17-இல் அறிவிப்பு வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் வரை மாநகர, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஒன்றிய மட்டத்திலான தேர்தலை அக்கட்சி அறிவித்ததையடுத்து, ஒன்றியத்திலுள்ள பதவிகளுக்காக திமுகவினர் மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒன்றிய அளவில் அவைத்தலைவர், செயலாளர், துணைச்செயலாளர் பதவி மூன்று, பொருளாளர், மாவட்டப்பிரதிநியாக மூன்று, செயற்குழு உறுப்பினர் பதினொன்று பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளன. தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பங்கள் அந்ததந்த மாவட்டக் கழக தலைமையங்களில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இதற்காக நியமிக்கப்பட்டுள்ள தலைமைக் கழக பிரநிதியிடம் வழங்க வேண்டும். தேர்தலில் போட்டியிருப்பின் 9 ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடித்து,  புதிய நிர்வாகிகள் பட்டியலை தலைமைக்கழகத்தில் சமர்ப்பிப்பார் என்று தெரிகிறது.

இதனொருபகுதியாக, தேனி மாவட்டத்தில் ஒன்றியப்பதவிகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் திமுகவிலுள்ள கம்பளத்தார்கள் போட்டியிட ஆர்வமாக மனுத்தாக்கல் செய்தனர். அதன்படி, இன்று (07-06-2022) ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றியச் செயலாளர் பதவிக்கு மாவட்டக்குழு முன்னாள் உறுப்பினர் M. ராஜ்குமார் அவர்களும், மாவட்டப் பிரதிநிதி பதவிக்கு தற்பொழுது ஒன்றியப்பிரதிநிதி பதவி வகித்துவரும் ஆர்.சக்திவேல் அவர்களும், தேர்தல் ஆணையாளரும், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் பரந்தாமன் அவர்களிடம் மனுதாக்கல் செய்தனர். மனுத்தாக்கலின்போது தங்கம், மறவபட்டி காமாட்சி, ராஜபெருமாள் ஆகிய கழக முன்னனியினர் உடன் இருந்தனர்.

ஒன்றியக்கழகத் தேர்தலில் போட்டியிடும் கம்பளத்தார் சமுதாய அரசியல் தலைவர்களுக்கு வாழ்த்துகள்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved