🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தீவிரமெடுக்கும் சமூகநீதி மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம்!

வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி சாதிவாரி கணக்கெடுப்பு, தனியார்துறையில் இடஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் நடைபெறவுள்ள சமூகநீதி மாநாடு நடைபெற்றவுள்ளது.

தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 115 எம்பிசி சாதியினரும், 146 பிசி சாதியினரும் இணைந்து நடத்தும் இந்த மாநாடு, மதுரை விமான நிலையம் அருகே  20 ஏக்கர் பரப்பளவில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் மிகப்பிரமாண்டமாக முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் அரங்கிற்கு அகில இந்திய அளவில் ஓபிசி பிரிவினருக்கு 27 விழுக்காடு வழங்க தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி இரத்தினவேல் பாண்டியன் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்க அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட ஆலோசனைக்குழுவில், தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். மாநாட்டிற்கு இன்னும் ஐம்பதிற்கும் குறைவான நாட்களே உள்ள சூழலில், எல்லா சமுதாயங்களும் அவரவர் சமுதாயத்தின் வலிமையை பறைசாற்ற போட்டி போட்டு பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளனர்.

தொட்டிய நாயக்கர் சமுதாய மக்களிடையே ஏற்கனவே விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. தேனியில் சமூகநீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தலைமையில் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதேபோல் நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் நாமக்கல், திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலும், வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கதின் பொதுச்செயலாளர் கோவையிலும் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தியுள்ளனர்.

இதந்தொடர்ச்சியாக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் திருப்பூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார். இன்று நடைபெற்ற திருப்பூர் அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோவில் - அருள்மிகு மாலா கஞ்சம்மாள்கோவில் கும்பாபிஷேக விழாவின்போது சமுதாய முக்கியதஸ்களிடமும், திருப்பூர் மாநகர் மாவட்ட மதிமுக இளைஞரணி அமைப்பாளர் சதீஷ் அவர்களிடமும் வழங்கினார். அப்பொழுது மாநிலதுணைத் பொதுச்செயலாளர் ஊத்துக்குளி சின்னச்சாமி உடனிருந்தார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved