🔴 LIVE | முப்பெரும் விழா 2023


+2 தேர்வில் சாதிக்கும் இளம் சிங்கங்கள்!

ஈரோடு மாவட்டம், போயனூர் பகுதியைச் சேர்ந்த திரு.சாமிநாதன் - திருமதி.செந்தமிழ்ச்செல்வி தம்பதியரின் மகள் செல்வி.ராமப்ரியா அன்னூர், செயின்ட் மேரிஸ் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துவந்தார். நேற்று வெளியான  தேர்வு முடிவுவில் 600-க்கு 590 மதிப்பெண் பெற்றி பள்ளியிலேயே முதலாவதாக தேர்ச்சி பெற்றுள்ளார். தையல் கலைஞராக வேலைபார்த்து வரும் சாமிநாதன் மகளை எல்கேஜி-யில் இருந்தே செயின்ட் மேரிஸ் பள்ளியில் சேர்த்து பயிற்றுவித்து வருகிறார்.  சென்னையிலுள்ள அண்ணா பொறியியல் கல்லூரியில்  கணினி அறிவியல் படிக்க ராமப்ரியா ஆர்வமாக உள்ளார். 


அதேபோல் திருப்பூர் மாவட்டம், நால்ரோட்டைச் சேர்ந்த திரு.துரைச்சாமி-திருமதி.வேணி ப்ரவீனா தம்பதியினரின் மகன் D.பரஞ்சோதி, அங்குள்ள S.R.மெட்ரிக்குலேசன் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். இதில் 600-க்கு 580 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளார். பட்டய கணக்காளர் ஆக வேண்டும் என்ற விருப்பமுடிய பரஞ்சோதி அதற்குண்டான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். துரைச்சாமி அவர்கள் திருப்பூர் நால்ரோட்டில் சரவணா ஹோட்டல்ஸ் என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறார். இளைய மகன் சரவணன் இந்தாண்டு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்.


நேற்று வெளியான பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர் அனைவருக்கும் வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் மற்றும் தொட்டிய நாயக்கர்.காம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved