🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நாமக்கல்லில் கம்பளத்தார் உறுப்பினர் சேர்க்கை தீவிரம்!

ஏறக்குறை 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொட்டிய நாயக்கர் சமுதாய மக்கள் வாழும் மாவட்டங்களில் ஒன்று நாமக்கல் மாவட்டம். இம்மாவட்டத்தில் கல்வி, அரசு வேலைவாய்ப்பு, தொழில்துறை, அரசியல், நீதித்துறை என அனைத்திலும் ஒருசேர குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறிய சமூகங்களில் ஒன்றாக கம்பளத்தார் சமுதாயம் உள்ளது. இம்மாவட்டத்திலுள்ள ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களின் முன்னெடுப்போடும், பொதுமக்கள், தொழிலதிபர்கள் ஒத்துழைப்போடும் "தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை" துவங்கப்பட்டது.


அறக்கட்டளை உறுப்பினர் கட்டணமாக ரூ.5000/- நிர்ணயம் செய்து முதல்கட்டமாக 1000 உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டு தீவிரமாக சேர்க்கை நடைபெற்று வந்தது. முதற்கட்டமாக 600-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்த்திருந்த நிலையில் அறக்கட்டளை நிறுவன தலைவர்களில் ஒருவரான முன்னாள் காவல்துறை அதிகாரி ரங்கசாமி அவர்கள் திடீரென மாரடைப்பால் காலமானதும், அதனைத் தொடர்ந்து வந்த கொரொனா பெருந்தொற்றால் சுமார் இரண்டாண்டுகளுக்கும் மேலாக இலக்கை நோக்கி நகர்வதில் சிறிது சுணக்கம் ஏற்பட்டிருந்தது.


அதேவேளையில் DNT, வன்னியர் இடஒதுக்கீடு, உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றங்களில் நடைபெற்ற வழக்குகளிலும், வன்னியர் இடஒதுக்கீடை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களிலும் மாவட்ட அளவில் உள்ள அமைப்பாக இல்லாமல், ஒட்டுமொத்த சமுதாய மக்களின் நலனுக்காகவும் பாடுபட்ட பெருமை நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளைக்கு உண்டு என்றால் மிகையல்ல. உள்ளூரில் மட்டுமல்லாமல் சென்னை, மதுரை,திருச்சி என எங்கு போராட்டம் நடைபெற்றாலும் அறக்கட்டளையின் பங்கேற்பு மற்ற சமூகங்களிடையே தொட்டிய நாயக்கர் சமூகத்திற்கு பெரிய அந்தஸ்தை பெற்றுக்கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி பல முனைகளிலும் சமுதாய நலனிற்காக பாடுபட்டு வரும் அறக்கட்டளை மீண்டும் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக திருச்செங்கோடு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இன்று சமூகநீதி மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு நடுவே வரப்பாளையம் - கீரம்பூர் கிராமத்தைச்  சேர்ந்த திரு சி.மணிவேல், திரு ப.மதியழகன், திரு கொ.தாமோதரன் ஆகியோர் இன்று ரூ.5000/- செலுத்தி அறக்கட்டளை உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.

மற்ற மாவட்டங்களுக்கு வழிகாட்டியாகவும், முன்னுதாரணமாகவும் விளங்கும் நாமக்கல் அறக்கட்டளை தலைவர்களுக்கும், உறுதுணையாக உள்ள சமுதாய உறவுகளுக்கும் வாழ்த்துகள்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved