🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமூகநீதி மாநாடு அடிக்கோல் நாட்டு விழா அழைப்பிதழ்!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் இணைந்து மதுரையில் வருகிற ஆகஸ்ட் 7ம் தேதி மாபெரும் சமூக நீதி மாநாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மாநாடு ஏற்பாடுகளை செய்வதற்கும், அனைத்து சமூகங்களை ஒருங்கிணைப்பதற்கும் மதுரையில் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதோடு, உயர்மட்ட ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டு விழிப்புணர்வு பிரச்சாரம், மாநாடு நடத்தும் இடம் தேர்வு, விழா மலர், காவல்துறை அனுமதி, நிதி திரட்டுதல் போன்ற பல்வேறு பணிகள் முடிக்கி விடப்பட்டுள்ளது.


இந்தநிலையில், வருகிற 29.06.2022 அன்று புதன்கிழமை காலை 10 மணியளவில், மதுரை விமான நிலையத்தின் பின்புறம் கருப்புகோவிலுக்கு அருகில் மாநாடு பந்தல் அமைப்பதற்கான கால்கோல் விழா நடைபெறுகிறது. இதில் அனைத்து சமுதாய அமைப்புகளின் தலைவர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.

அதனைத்தொடர்ந்து, மதுரை சமூக நீதி மாநாடு குறித்து, தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள விடுதலைக்களம் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரச்சார வாகனம் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட உள்ளது.


இருநூறுக்கும் மேற்பட்ட சமூகங்கள் இணைந்து நடத்தும் இந்த மாநாட்டை ஒட்டி, அரசியலில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பல சமூகங்கள் புத்துணர்ச்சி பெற்றுள்ளன. வண்ணார், மருத்துவர், ஜங்கம், மீனவர், முத்தரையர், குலாளர், வேட்டுவக்கவுண்டர், ஊராளிக்கவுண்டர் போன்ற சமுதாய தலைவர்கள் தங்கள் பிரச்சாரத்தை ஏற்கனவே துவங்கியுள்ள நிலையில், விடுதலைக்களம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பிரச்சார வாகனம், தொட்டிய நாயக்கர் சமுதாய மக்கள் வசிக்கும் கிராமங்களில் சென்று சமூகநீதி மாநாடு, சாதிவாரி கணக்கெடுப்பு, இடஒதுக்கீடு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யவுள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved