🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அடிக்கோல் நாட்டுவிழாவா? அடிக்கோல் நாட்டு மாநாடா?

இராஜகம்பளத்து தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 115 மிகவும் பிற்படுத்தப்பட்ட, 146 பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் இணைந்து உருவாக்கியுள்ள சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் மதுரையில் வரும் ஆகஸ்டு 07'இல் மாபெரும் சமூகநீதி மாநாடு நடைபெறவுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு, தனியார்துறையில் இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இம்மாநாட்டிற்கான அடிக்கோல் நாட்டு விழா இன்று காலை 10 மணியளவில் மாநாடு நடைபெறவுள்ள திடலில் நடைபெற்றது.

அடிக்கோல் நாட்டுவிழாவா? அல்லது மாநாடா என்று பார்ப்போர் வியக்கும் வண்ணம், நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் பல்வேறு சமுதாங்களை சேர்ந்த தலைவர்கள் திரண்டு வந்து கலந்துகொண்டனர்.  தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் நாமக்கல் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


கால்கோல் நடுவிழா முடிந்து நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில், அனைத்து சமுதாய தலைவர்களும் கலந்துகொண்டு மாநாட்டு பணிகள் குறித்து ஆலோசித்தனர். இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் இடஒதுக்கீடு வழக்கிற்காக ரூ.2,05,000/- வழங்கிய தொட்டிய நாயக்கர் சமுதாயம் சார்பில், மதுரையில் நடைபெறும் சமூகநீதி மாநாட்டிற்கான முதல் கட்ட நிதியாக ரூ.50000/- (ரூ.ஐம்பதாயிரம்) கான காசோலையை சீர்மரபினர் நலச்சங்கத்திடம் வழங்கினார்.


இதுதவிர, கடந்த மே-31 ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நல ஆணையக்கூட்டத்தில் வன்னியர் இடஒதுக்கீடு சம்மந்தமாக எதுவும் விவாதிக்கக்கூடாது என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றதிற்கான வழக்குச் செலவுக்காக தொட்டிய நாயக்கர் சமூகத்தின் சார்பில் ரூ.25000/-( ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம் மட்டும்) வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது. 


இன்று கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சமுதாய தலைவர், தங்கள் சமுதாயத்தின் சார்பில் மேற்கொண்டு வரும் பிரச்சாரம் குறித்தும், பிற சமூகங்களை இணைத்து அழைத்து வருவது பற்றியும் விரிவாக பேசினர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved