🔴 LIVE | முப்பெரும் விழா 2023


10th, +2 மாணவ-மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை அறிவிப்பு!

விருதுநகரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை சார்பாக 2021-22 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் பயின்று பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகமதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகையும், பாராட்டு சான்றிதழும் வழங்குவது தொடர்பாக அறக்கட்டளையின் செயலாளர் வை.மலைராஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது.

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளையின் சார்பில் இந்த ஆண்டு (2021-2022) அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முறையே 400 மற்றும் அதற்கும் அதிகமான மதிப்பெண்கள், 500 மற்றும் அதற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்று வெற்றிபெற்ற இராஜகம்பளத்து தொட்டிய நாயக்கர் சமுதாய மாணவ-மாணவியருக்கு கல்வி ஊக்கத் தொகையாக ரூ.1000/- (ரூ.ஆயிரம் மட்டும்) மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.

ஆர்வமுடைய மாணவ-மாணவியர் கீழ்கண்ட விலாசத்திற்கு மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், விலாசம், தொலைப்பேசி எண் குறிப்பிட்டு இம்மாதம் 31.07.2022-க்குள் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அனுப்ப வேண்டிய முகவரி:
திரு.வை.மலைராஜன்,
செயலாளர்,
129T, லட்சுமி காலணி,
கச்சேரி சாலை,
விருதுநகர்-626001
கைப்பேசி எண்:94438 68221, 94429 90670
மின்னஞ்சல் முகவரி: thottianayakkar@gmail.com

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved