🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மாநாட்டுப்பணியில் களமிறங்கிய பெண்கள்!

தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 115 மிகவும் பிற்படுத்தப்பட்ட, 146 பிற்படுத்தப்பட்ட சாதிகள் இணைந்து உருவாக்கியுள்ள சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் அடுத்த மாதம்'7-ஆம் தேதி மதுரையில் மாபெரும் சமூக நீதி மாநாடு நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டினை வெற்றிகரமாக நடத்துவதற்காக அனைத்து சமுதாயங்களையும் உள்ளடக்கிய பல்வேறு குழுக்கள் உருவாக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


இதன் ஒருபகுதியாக சமுதாய அமைப்புகள் அவரவர் சமுதாயம் வசிக்கும் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று வீடு வீடாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. முக்குலத்தோர் வசிக்கும் கிராமங்களுக்கு ஆட்டோவில் பிரச்சாரத்திற்கு செல்லும் பெண்கள், இரவு-பகல் பாராமல் கிராமங்களில் தங்கி  மக்களைச் சந்தித்து நோட்டீஸ் விநியோகம் செய்து வருகின்றனர்.

அதேபோல் வேட்டுவக்கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த அமைப்புகளும் கொங்கு மண்டல்த்தில் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.


தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் அனைத்து குழுக்களிலும் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ள நிலையில், பிரச்சாரக்குழுவிற்கு முழுப் பொறுப்பேற்றுள்ள விடுதலைக்களம் கட்சியின் சார்பில் மாநாட்டுப்பணிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரச்சாரவேனில் சென்று மாநாடிற்கான விழிப்புணவை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக இன்று நமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம், புதுசத்திரம் ஒன்றியம், சேந்தமங்கலம் ஒன்றியம், ராசிபுரம் ஒன்றியம் ஆகிய ஒன்றிய பகுதிகளில் உள்ள 60க்கும் மேற்பட்ட கிராமங்களில், மாநில பொறுப்பாளர் பூவரசி ராஜேந்திரன், நாமக்கல் நகரச் செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் மாநாட்டிற்கான அழைப்பிதழ் வழங்கி, மாநாடு குறித்த தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved