🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமூகநீதிகாக்க தன்னலம் பேணாது தனியொருவனாய் திருப்பூர் ராமசாமி நாயக்கர்!

வன்னியர் சாதிக்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் தமிழகத்தில் இடஒதுக்கீடு விவகாரம் சூடிபிடிக்கத்தொடங்கியது. நாட்டிலேயே அதிக இடஒதுக்கீடு வழங்கும் மாநிலமான தமிழகத்தில் அனைத்து சமூகத்தினரும் கல்வியில் மேலோங்கி வளர அடித்தளமாக இருந்தது இடஒதுக்கீடு என்றால் மிகையல்ல. தமிழகத்தில் வழங்கப்படுவதுபோல் 50 விழுக்காடு இடஒதுக்கீடு பிறமாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு வழங்கப்படாத காரணத்தாலேயே வடமாநிலங்கள் கல்வியில் மிகவும் பின்தங்கி, தென்மாநிலங்களை நோக்கி கூலிகளாக படையெடுத்து வருகின்றனர்.

ஒருபுறம் இடஒதுக்கீடு கிடைக்காமல் அத்தக்கூலிகளாக ஒருபிரிவு மக்களும், இடஒதுக்கீடு பெற்று மேலே சென்ற முதல்தலைமுறையினர் இன்னும் தங்கள் சமூகங்களில் பலலட்சம் பேர் முன்னேற இடஒதுக்கீடு அவசியம் என்பதை மறந்து, தங்கள் நிரந்தமாக முன்னேறி விட்டதாக ஏறி வந்த ஏணியை மறந்து கனவுலகில் சஞ்சரிக்கின்றனர். ஆனால் நாட்டிலுள்ள அதிகாரங்கள் அனைத்திலும் 90 விழுக்காடுக்கும் மேல் அனுபவித்து வரும் உயர்குடிகள் மொத்தம் 5 விழுக்காடு மட்டுமே இருந்தும் 10 விழுக்காடு இடஒதுக்கீடை சட்டத்திற்கு புறம்பாக இயற்றிக்கொண்டனர். 


இடஒதுக்கீடு கேட்டு போராடமலேயே தனி இடஒதுக்கீடு கிடைத்தது உயர்சாதிகளுக்கு மட்டும் தான். ஆனால் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு தேவைப்படும் சமூகங்களோ, சாதிய அமைப்புகளோ அதன் தேவையை உணர்ந்தாக இல்லை. ஏதோ வாராது வந்த மாமணியாய் வந்த நீதிக்கட்சியாலும், பெரியார், அண்ணா, கலைஞர், ஜெயலலிதா போன்ற தலைவர்களாலும் நாம் போராடாமலேயே இடஒதுக்கீடு பெற்றும், இதுவரை பாதுகாத்தும் கொடுத்தனர்.

கடந்த 30 வருடங்களாக அனுபவித்து வரும் இடஒதுக்கீட்டிற்கு வன்னியர் 10.5 விழுக்காடு தனி இடஒதுக்கீடு விவகாரம், நமக்கு தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக மாறியுள்ளது. இச்சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்து விட்டாலும், மீண்டும் வரும் ஆபத்துகள் தொடரவே செய்கின்றன. இந்தியாவில் வல்லவன் வகுத்ததே வாய்க்கால் என்பதை உயர்சாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு உறுதி செய்கிறது. பெரும்பான்மை சாதிகளைச் சேர்ந்த எல்லா சாதிகளைச் சேர்ந்தவர்களும் மந்திரிகளாய் இருந்தாலும் வன்னியர் சாதி அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும் இடஒதுக்கீடு பெறுவதில் முனைப்பாக இருக்கின்றனர் என்பது தொடர்ந்து பார்த்து வரும் உண்மை.

எனவே எதிர்வரும் ஆபத்துகளை உணர்ந்து பிற சமூகங்கள் இணைந்து போராடுவது காலத்தின் கட்டாயமாக உள்ளது. ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் போதுமான புள்ளிவிபரம் இல்லையென்றும்,  69 விழுக்காடு இடஒதுக்கீடை தொடர்ந்து பாதுக்காக்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இதை முன்னெடுத்துச்செல்ல உருவாக்கப்பட்டது தான் சமூகநீதிக்கூட்டமைப்பு.  நீதிமன்றங்கள் மூலமும், போராட்ட களங்கள் மூலமும் அரசுகள் கொண்டுவரும் மக்கள்விரோத சட்டங்கலை எதிர்கொண்டாலும், அடித்தட்டு மக்களிடம் சமூகநீதி, இடஒதுக்கீடு குறித்த புரிதலை ஏற்படுத்துவது அவசியம். அதற்காக வரும் ஆகஸ்டு 7-இல் மதுரையில் மாபெரும் சமூகநீதி மாநாட்டை இக்கூட்டமைப்பு நடத்த உள்ளது.

சமூகநீதி கூட்டமைப்பிலுள்ள எல்லா சமூகங்களும் வீடு வீடாகச்சென்று நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் விடுதலைக்களம் கட்சியும், நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளையும் முழுவீச்சில் களம் இறங்கி நாமக்கல், கரூர், திருச்சி போன்ற மாவட்டங்களில் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக திருப்பூரில் திரு.இராமசாமி அவர்கள் சமூகநீதி மாநாட்டிற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை  கடந்த சில நாட்களாக திருப்பூர் மாநகரில் செய்து வருகிறார். ரியல் எஸ்டேட், பின்னலாடை தொழில்களில் ஈடுபட்டு வரும் இராமசாமி, முதுநிலை பொறியியல் பட்டதாரி (M.Tech) என்பது  குறிப்பிடத்தக்கது.

சமுதாய வாக்குகளைப்பெற்று தலைவர் ஆகியவர்கள், சமுதாயத்தை வைத்து அரசியல் செய்பவர்கள், சமுதாயத்திற்காக அமைப்புகள் நடத்துபவர்கள், சமூகத்திற்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டில் படித்து முன்னேறியவர்களில் பெரும்பாலோனோர் சமுதாயத்திற்காக ஏற்கனவே உள்ள உரிமைகளை காக்க முன்வராத நிலையில், ராமசாமி போன்றோர் யாரையும் எதிர்பார்க்காமல், தன்னலமின்றி தனியாளாய் சமுதாய மக்களிடம் விழிப்புணவு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவது பாரட்டுக்குறியது. 

இன்னும் ஓராயிரம் இராமசாமிகள் கம்பளத்தார் சமுதாயத்தில் உருவாகட்டும்!.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved